ஆனந்த குமாரசாமி இந்திய மெய்யியலையும் இந்தியக் கலையையும் எப்படி ஒன்றோடொன்று இணைத்து புரிந்துகொள்ளவேண்டும் என்று விளக்கிய முன்னோடி மேதை. ஆனால் அவரைப் பற்றிய தமிழ் விக்கி பதிவை படித்து ஒருவர் திடுக்கிட்டார். ஆனந்தகுமாரசாமி பலமுறை மணமுறிவு பெற்றிருக்கிறார் என்னும் செய்தி அவரை தூங்கவிடவில்லை. அவர் கற்பனையில் ஆனந்த குமாரசாமி ஒரு இந்திய முனிவர். அவருக்கு நான் ஆனந்த குமாரசாமி அடிப்படையில் வெள்ளையர், அமெரிக்கர் என்று விரிவாக விளக்கவேண்டியிருந்தது
ஆனந்த குமாரசாமி