விஷ்ணுபுரம் பதிப்பகம், புதிய நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்


விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

இந்த கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பல புதிய நூல்கள் அரங்குக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கோவை ஞானி பற்றி நான் எழுதிய ‘ஞானி’

அது ஞானி பற்றிய நூல் மட்டுமல்ல. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் தமிழ் இலக்கியம், அரசியல் களங்களில் பேசப்பட்டவற்றின் ஒரு வரலாற்றுச் சித்திரமும் அதிலுள்ளது. ஒரு பொதுவாசகன்கூட வாசிக்கக்கூடிய ஓட்டமும் கொண்டது.

அரங்கில் அதை நண்பர் அகரமுதல்வன் வெளியிட கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ‘ஒரு தமிழ்த்தேசியவாதியின் வாழ்க்கைக்கதையை வெளியிட்டதில் மகிழ்ச்சி’ என்று அகரமுதல்வன் சொன்னார்.

புதிய நூல்களின் பட்டியல் விஷ்ணுபுரம் இணையதளத்தில் உள்ளது. கதாநாயகி புதிய நாவல். தொடராக வாசித்தவர்கள்கூட நூலாக வாசிக்கலாம். அதன் கதைக்குள் கதைக்குள் கதை என்னும் கட்டமைப்பு அப்போதுதான் தெளிவாகப்பிடிபடும்.

நான்காவது கொலை நான் 1999 வாக்கில் திண்ணை இணையதளத்தில் எழுதிய பகடிக்கதை. இப்போதுதான் நூல்வடிவம் பெறுகிறது. சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டு நீண்டநாள் அச்சில் இல்லாதிருந்த ஈராறுகால்கொண்டெழும் புரவி வெளிவந்துள்ளது.

விஷ்ணுபுரம் பதிப்பகம் வளர்கிறது. உண்மையில் லாபகரமாக நிகழ்ந்து, வளர்ச்சி வரும்போது பல புதிய அறைகூவல்கள் அமைகின்றன. இதுவரை ஊழியர் இல்லாமல் விஷ்ணுபுரம் பதிப்பகம் சமாளித்தது. பங்குதாரரான மீனாம்பிகையே பொட்டலங்களை எடுத்துவருவது முதல் எல்லா வேலையையும் செய்து வருகிறார். இனி ஊழியர்கள் இன்றி அமையாது என்னும் நிலை.

ஆகவே இனிமேல் என் எல்லா நூல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடவேண்டும் என எண்ணியிருக்கிறோம். அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதுவரை வெளிவந்த என் எல்லா நூல்களுமே விஷ்ணுபுரம் வெளியீடாகக் கிடைக்கும்.  பிற பதிப்பகங்கள் வெளியிட்ட எல்லா நூல்களும் எங்களால் உடனடியாக வெளியிடப்படும்.

வெண்முரசும் முழுமையாக வெளியிடப்படவேண்டும் என்பது திட்டம். மொத்த வெண்முரசையும் ஒரே நூலகத் தொகுப்பாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளது. அதற்கான முதலீடும் திரட்டப்படவேண்டும். விரைவில் அறிவிப்போம்.

ஜெ

விஷ்ணுபுரத்தில் வெளிவந்துள்ள புதிய புத்தகங்கள் ஆன்லைனில் வாங்க

ஞானி ஆன்லைனில் வாங்க
கதாநாயகி ஆன்லைனில் வாங்க
நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க
ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க
இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க
சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க
வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க
ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க
ஞானி ஆன்லைனில் வாங்க

 

விஷ்ணுபுரம் மறுபதிப்பு செய்துள்ள புத்தகங்கள் வாங்க

விசும்பு ஆன்லைனில் வாங்க
ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க
அனல் காற்று ஆன்லைனில் வாங்க

 

முந்தைய கட்டுரைஒரு விளக்கம் ஒரு பட்டியல்- விஷால் ராஜா
அடுத்த கட்டுரைவள்ளலார்