நாமக்கல் உரை,கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு,

நாமக்கல்லில் உங்களை நேரில் சந்தித்து, உரையை மெய்நிகராக அல்லாமல் அது நிகழ்த்தப்பட்ட அந்த கணத்தில் பங்கெடுத்து கவனிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உரையின் மூலம் நான் பெற்றுக்கொண்ட புரிதல்களை, கீழ்கண்டவாறு தொகுத்துக்கொள்கிறேன்.

உரை 

தொடக்கம்:

 • உங்களின் அனைத்து முயற்சிகளிலும், முன்னோடிகளை உங்கள் வாசர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு பின்னர் உரையையோ அல்லது கட்டுரையையோ தொடங்கும் பாணி மிகவும் அற்புதமான ஒன்று. இதன் மூலம் என்னைப்போன்றோர் அந்த ஊரைப்பற்றியோ, அல்லது உங்களின் மூலம் அறிந்துகொள்ளும் கோட்பாடுகள் முன்பெப்படி இருந்தது என்பது பற்றியோ அறிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக உள்ளது.
 • இவ்வுரையில் நீங்கள் நாமக்கல்லில் நிகழ்த்துவதால் நாமக்கல் கவிஞர் பற்றி ஒரு குறிப்புடன் ஆரம்பித்தது, மற்றும் அன்று தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய கட்டுரையை தளத்தில் பதிவேற்றியது அனைத்தும் ஒரு தொடர்ச்சியை காட்டியது.

வரையறை:

 • நம் சூழலில், சிந்திப்பதற்கு இருக்கும் முதன்மையான இடர் என நான் கருத்தில் கொள்வதுசிந்தனையின் அடைப்படைக்கூறுகளை வரையறையின்றி, கால, சூழல் பொருத்தமின்றி உபயோகப்படுத்துவது. அவ்வகையில் அமெரிக்க தத்துவ அறிஞரும், Britanicca Encylopedia வின் chairman ஆக சிலகாலம் பணியாற்றிய Mortimer Adler போன்றோர் ஒரு உரையாடலுக்கு (intellectual discourse) அடிப்படை அலகாக கூறுவது – Coming to terms with the author, coming to terms is the first stage of interpretation. Unless the reader comes to terms with the author, the communication of knowledge from one to the other does not takes place. A term is the basic element of communicable knowledge.
 • விடுதலை என்றால் என்ன? என்ற தலைப்பை முதலில் எதிர் கொண்டவுடன் உருவான முதல்பொதுச்சித்திரம் : தற்சமயம் புழங்கிக் கொண்டிருக்கும் ஏதோ சூழலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது!. இது அவரவர் பொருள் கொள்ளும் விதத்தில் மாறுபடும், உதாரணமாக விடுதலையை freedom, liberation, to set free, get away with போன்ற பல அர்த்தங்களில் விளங்கிக்கொள்ளலாம்.
 • உரையின் ஆரம்பத்திலேயே விடுதலை என்கிற சொல்முக்தி, மோக்ஷம், வீடுபேறு, விடுதல், வீடு, விடுதலை போராட்டம், இரட்சிப்பு, சொர்கம், விடப்பட வேண்டியது, விட்டுச்செல்லவேண்டியது, துறத்தல், துறத்தலின் மூலம் அடைவேண்டியது என எவ்வாறு பொது சூழலில் உபயோகப்படுத்தப்படுகிறது என்கிற விளக்கம் நல்ல ஒரு அடித்தளமாக அமைந்தது.

பொது சூழலில் உள்ள எதிர்பார்ப்பு/மதிப்பு:

 • விடுதலை அடைந்தவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒரு சமூகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் உதறி விட்டு, அதன் பின் கிடைப்பது விடுதலை. அன்றாடம் அல்லாத ஒன்று தான் விடுதலை. சென்ற காலங்களில் பண்டாரம் போன்றவர்களுக்கு ஞானம் ஒரு விடுதலையாக அமைந்தது. உரையின் இப்பகுதியில் நீங்கள் அளித்த விளக்கங்கள் யாவும், எவ்வாறு அது புழங்கி மேலெழுந்து வந்த சூழலின் அர்த்தத்தை அடைந்தது என்பது ஒரு புதிய திறப்பாக அமைந்தது.

இந்திய மரபில் விடுதலை:

 • சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், வேதாந்தம் என்ற ஆறு பிரிவுகளையும், அவை முன்வைத்த தரிசனங்களையும் (இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், மற்றும் உங்களின் கட்டுரைகளின் வழியாக மட்டுமே) ஏற்கனவே அறிமுகம் இருந்தாலும் , விடுதலை பற்றியும், ஒவ்வொரு தரிசனத்திலும் அது எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய உங்களது விளக்கம் முற்றிலும் புதிய ஒரு சிந்தனை, முன்பில்லாத ஒரு அறிதலாக இருந்தது.
 • எப்படி ஒவ்வொரு தரிசனமும் அது எழுந்து வந்த சூழலில், அதன் வரையறைக்குட்பட்ட விடுதலையை முன்வைத்தன என்ற விளக்கமும், அத்தரிசனங்களை கடைபிடிப்பதன் வழியாக எவ்வாறு அதன் வழி வகுக்கப்பட்டு, அதன்பால் மட்டுமே அடைய முடிந்த விடுதலையை அடைய முடியும் என்பதை பற்றிய தர்க்கங்களும் இதுவரை நான் யோசிக்காத கோணத்தில் இருந்தது.
 • மேலும் எவ்வாறு ஒருவர் தனக்கு இயற்கையாக அளிக்கப்பட்டுள்ள குணங்கள் மற்றும் தன்னியல்புகளை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் , அதற்கேற்ற தரிசனங்களை கடைபிடித்து அதன் வழி தொடர்ந்தால் அடையும் முழுமை/நிறைவு பற்றிய விளக்கம், உரையின் தனித்துவமான உச்சம்.

சுருக்கம் (Summary):

 • விடுதலை அளிக்கக்கூடிய எதுவும் அதை இறுதியில் அளிக்காது.
 • இங்குள்ள நிறைவையோ, முழுமையையோ அடையமுடியாமால் தடுப்பது எதுவோ, அதை கண்டடைந்து களைவதே விடுதலை.
 • விடுதலை என்பது அடையப்படுவது அல்ல, எய்தப்படுவது அல்ல…..திகழ்வது.

உரையின் மூலம் நான் பெற்றுக்கொண்டது

 • உங்களின் மற்ற உரைகளை காணொளியில் மட்டுமே கண்டுள்ளேன். அவற்றில் நீங்கள் ஒரு கருத்தை பற்றிய உங்களின் கண்ணோட்டத்தை, வரையறைசெய்து, தொகுத்து முன்வைத்தமாதிரி உணர்தேன். ஆனால் இவ்வுரையில் உங்களின் வாழ்வினூடாக, அனுபவத்தின் வாயிலாக நீங்கள் கண்டடைந்த ஒரு உண்மையை பகிர்ந்துகொண்டது போல இருந்தது.
 • மேலும் நம்பொதுச்சூழலில் பரவலாக இருக்கும்இங்கு எதையும் மாற்ற முடியாது, மாற்ற வேண்டியது இல்லை, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருந்துவிட்டு, சொர்க்கத்தை அடையும் மார்க்கத்தை பற்றி யோசியுங்கள்போன்ற போதனைகளுக்கு நேர் மாறாக நீங்கள், செயலாற்ற(call of duty, call for action) அறைகூவல் விடுகிறீர்கள். அதனினும் மரபினூடாக அவரவர் தனித்தன்மை அறிந்து அதன்பொருட்டு செயலாற்றுங்கள் என.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்ஏற்பாடுகள்

 • கடந்த நான்கு வருடங்களாக உங்களை வாசித்து வருகிறேன், ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற zoom உரையாடல்களில் பங்கு கொண்டுள்ளேன், ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தில் நேரடியாக பங்கு கொள்வது இதுவே முதல்முறை.
 • உரை பற்றிய அறிவிப்பு தளத்தில் வந்த உடனையே அமைப்பாளர்களை தொடர்பு கொண்டேன், வரதராஜன் சார், கார்த்திகேயன் சார் அனைவரும் பரிந்துரைகளை எடுத்துரைத்தனர். Meticulously planned and well organized event. அரங்க அமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு என அனைத்தும், உரையை கச்சிதமாகவும் கவனமாகவும் புரிந்து கொள்ள உதவியது.
 • Based on my personal experience the thing that is missing in the public events (open or registration based) organised these days even with the help of event management or hospitality partners is  – 1) Empathy and/or 2) Lack of respect for fellow humans & their time. வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வேறு சில ஏற்பாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கில்லாத ஒரு commitment இங்கு இருப்பதை வெகு இயல்பாகவே உணரமுடிந்தது. நான் அடைந்த தனிப்பட்ட சவுகரியத்தை (comfort) வைத்து இதைக்கூறவில்லை.
 • சக வாசகரின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய நுண்ணுர்வு கொண்ட ஒரு வாசக/நண்பர் வட்டத்தால் மட்டுமே இத்தகைய ஒரு இயக்கத்தின் துணைகொண்டு, ஞாயிற்றுக்கிழமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும்.
 • இறுதியாக, அன்று மதியம் 3.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாமக்கல் பேரூந்துநிலையத்தை அடைந்த நான், உரை தொடங்குவதற்கு முன்னரே அரங்கை அடைந்தால் பிற வாசகரை சந்திக்கலாம் என எண்ணிக்கொண்டு, நேரம் கருதி ஒரு ஷேர் ஆட்டோ பிடித்தேன், ஓட்டுநர் 150 ரூபா (3km) ஆகும் என்ற போதும் பரவாயில்லை என ஏறி அமர்கையில்சார் யாராவது கேட்டா, டிரைவரோட சொந்தக்கார்னு சொல்லுங்க, பஸ் ஸ்டாண்டுக்கு இந்த பக்கம் ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடாது என்றார். நாமக்கல்லில் வாசகர் அல்லாத ஒரு புது உறவு என எண்ணிக் கொண்டு அரங்கை அடைந்தேன். நிகழ்ச்சிக்குப்பின் உங்களுடன் உரையாடல், சகவாசகருடன் உரையாடல் என நேரம் போனதால் ஊர் திரும்ப, முன்பதிவு செய்திருந்த பேருந்தை தவற விட்டுவிட்டேன்…. எல்லாம் முடிந்து அரங்கிலிருந்து மகேஷ் சாருடன் காரில் புறப்படும் போது அவ்வழியே ஒரு வெளியூர் அரசு பேருந்து சென்றது, என்நிலை அறிந்தும், என்மேல் இருந்த அக்கறையாலும் மகேஷ் சார் காரில் வேகமாக துரத்திச் சென்று ஏற்றிவிட பார்த்தார். அது வேறு ஒரு ஊர்க்கு செல்லும் பேருந்து, கடந்து நின்று விட்டோம். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் மற்றுமொரு ஒரு வாசகரும் என்னைப் போலவே ஊர் திரும்ப தனிமையில் காத்திருப்பதாய் அழைப்பு வந்து,மறுபடியும் வந்து அவரையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் இருவரையும் நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஒருசேர இறக்கிவிட்டுவிட்டு மகேஷ் சார் – ஒன்னும் பிரச்னை இல்லைல, safe போயிடுவீங்கலஎன்றார், அப்பொழுது மணி நள்ளிரவு 12.05 AM”. அன்று மாலை முழுவதும் நான் இலக்கியவட்ட வாசர்களுடன் இருந்தாலும், மகேஷ் சார் நான் பார்த்தது, உரையாடியது 10 நிமிடத்திற்கும் குறைவு தான்
 • விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு என் அன்புகள்.

அன்புடன்,

விவேக்

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை 51
அடுத்த கட்டுரைஅமலை, கடிதம்