அபி. தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு, கவிஞர் அபி அவர்கள் 80 வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “அபி – 80” நிகழ்வு மதுரையில் 31.07.2022 அன்று மாலை நடைபெறவுள்ளது.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள ’வி.எஸ்.செல்லம் ப்ளூ ஹெவன்’ பார்ட்டி ஹாலில் விழா நடைபெறும்.
இவ்விழாவில் எழுத்தாளர் நா.ஜயபாஸ்கரன், கவிஞர் நிஷா மன்சூர், எழுத்தாளர் சுசித்ரா, கவிஞர் ஃபைஸ் காதிரி, எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றுகின்றனர். கவிஞர் அபி ஏற்புரை வழங்குவார்.
அபியின் மாணவர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு, அபியின் நேர்காணல் கொண்ட அபி எண்பது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் விழாவில் வெளியிடப்படும்.
நண்பர்கள் அனைவரும் விழாவில் பங்குகொள்ள வேண்டுமென விழைகிறோம்.
நன்றி,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.