பொன்னியின் செல்வன், கடிதங்கள்

பொன்னியின் செல்வன் நாவல் 

யவனராணி- சாண்டில்யன்

உடையார் -பாலகுமாரன்

பர்ட்டன் ஸ்டெயின்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரை கனக்கச்சிதமாக செதுக்கப்பட்ட உரை.மேடை ஏறிய பெரும்பாலானவர்கள் என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றார்கள்.ஆனால் நீங்கள் அதிகம் பேசப்போவதில்லை என்று ஆரம்பித்தீர்கள்.நீங்கள் எப்போதும் சொல்வது போல ஒரு ‘Anecdote’.

அந்த ஏழு நிமிட உரையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கன்னி (பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை) ஆர்வமுடைய ஒருவருக்கு அது மிகப்பெரிய வாசலை திறக்கும். அதுபோல ஒவ்வொரு மேடையிலும் அதற்காக பணியாற்றிய முன்னோர்களையும் பெரியோர்களையும் நினைவு கூறிக்கொள்ளும் உங்களின் பணிவும் முதிர்வும் எனக்கு வியப்பளிக்கிறது.

இந்த ஆண்டு அடுத்தடுத்து நீங்கள் பணியாற்றிய திரைப்படங்களை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.என்னுடைய நண்பர் ஒருவர் தீவிரமான சிம்பு ரசிகர் அவருக்கு முன்பே வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி சில தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.ஏன் திடீர்னு இவ்ளோ ஆர்வம் என்று கேட்டார். ஏன்னா அது எங்க ஹீரோவுடைய கதை என்றேன்.

அன்பும் முத்தங்களும் ஜெ.

என்றும் அன்புடன் 

பிரகதீஷ்.

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் அந்த குறுகிய பொழுதைக்கூட தமிழுக்கும் தமிழ் வரலாற்றாய்வுக்கும் பங்களிப்பாற்றிய அறிஞர்களின் பெயர்களைச் சொல்ல பயன்படுத்தியதும் மிகமிக முக்கியமான ஒரு செயல்பாடு. உங்கள் பணி என்ன, பொறுப்பு என்ன என்று எப்போதும் உணர்ந்திருக்கிறீர்கள். ஓர் ஆய்வுமேடையில்கூட இன்றெல்லாம் இத்தனை குறிப்பாக முன்னோடி ஆய்வாளர் பெயர்களைச் சொல்வதில்லை. கே..நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் இருவரும் சோழர் வரலாற்றை எழுதியவர்கள். சோழர் கால நிலவுடைமை முறை பற்றிய பல கேள்விகளுக்கு விடையளித்தவர்கள் பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா. சோழர்காலக் கலையை பற்றி விரிவாக ஆய்வுசெய்தவர் குடவாயில் பாலசுப்ரமணியம். இவர்களை அந்த மேடையில் எத்தனைபேர் கவனிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் யூடியூபில் பார்க்கும் ஒரு ஐம்பதாயிரம் பேரில் ஐம்பதுபேர் இப்பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு இவர்களை வாசித்தால்கூட தமிழுக்கு அது பெரிய கொடை

அரங்க.ராமசாமி

  

முந்தைய கட்டுரைதேசியகீதப் பயணம் -இளையராஜா
அடுத்த கட்டுரைபுதுக்கவிதை என்னும் சொல்