முராத்தியின் பீர்புட்டிகள்

நேற்று பெங்களூரில் இருந்து நூறு கிமீ தூரத்தில் உள்ள முராத்தி என்ற மலைவாச இடத்துக்குச் சென்றிருந்தேன். அருமையான இடம். என்ன பிரச்சினை என்றால்  கண்ணாடிச்சில்லுகள். மது அருந்துபவர்கள் அந்தக் குப்பிகளை வீசி எறிந்து உடைக்கிறார்கள். இங்கே நடந்தேறுவது ஷோலே உச்சகட்ட காட்சி மாதிரி.  இங்கே வரும் 90 சதம் பேரும்  பெங்களூரைச் சேர்ந்த தொழில்நிபுணர்கள். உயர்கல்வி கற்றவர்கள். இவர்கள் எங்கிருந்து தங்கள் அற மதிப்பீடுகளைக்  கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியிலிருந்தா பெற்றோரிடமிருந்தா இல்லை சமூகத்தில் இருந்தா?

உங்கள் யானைடாக்டர் கதையை வாசித்திருக்கிறேன்.ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.ஆனால் நேற்று ஞாபகம் வந்தது. நேற்று என்னிடம் பெல்ட் ,தைரியம் இல்லை.நேற்றும் ஒரு பெரிய IT கம்பெனி ஊழியர்கள் குடித்து விட்டு பாட்டில்உடைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் மேனேஜர் முதல் அனைவரும் அதை ரசித்து ஆரவாரம் செய்து புகைப்படங்கள்எடுத்தனர்.அவர்கள் FaceBook  இல் அந்த புகைப்படங்கள்இருக்கலாம்.

ஜெகன்னாதன் ராமையா

யானைடாக்டர் கதை

யானைடாக்டர் கடிதம்

யானைடாக்டர் கடிதம்

முந்தைய கட்டுரையானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைஇந்தியா என்னும் குப்பைக் கூடை