சுஜாதா

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெ,

எனக்கு ஒரு சந்தேகம்,

நான் வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ். ரா, அசோகமித்திரன் போன்றவர்களின் குறிப்பிட்ட நூல்களை வாசித்திருக்கிறேன். அந்த சுவையில் மேலும் சில நூல்களைத் தேடித் தேடி வாங்கி வைத்துள்ளேன்.

அந்த வாசிக்கும் சுவையில் சிறிதளவு கூட சுஜாதாவின் நாவலில் ஈர்ப்பு இல்லை. அவருடைய நாவல்களை வாசித்த அளவில் நான் சிறுவயதில் ஆர்வமாக வாசித்த பட்டுக்கோட்டை, ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன் நாவல் மாதிரிதான் உள்ளது. எந்தவிதத்தில் வண்ணநிலவணைவிட, வண்ணதாசனைவிட சுஜாதாவுக்கு இவ்வளவு பேர் வெறிகொண்ட சினிமா ரசிகர்களைப் போல இப்படி வாசிக்கிறார்கள். இவரை எப்படி இலக்கியவாதிகள் உயர்த்திப்  பிடிக்கிறார்கள். எனக்குத்தான் போதாமையா?

என்னுடைய வாசிப்பு முறை சரியில்லையா?

முத்துகிருஷ்ணன் தனுஷ்கோடி

அன்புள்ள முத்துகிருஷ்ணன்

சுஜாதாவின் எழுத்து,ஒரு குறிப்பிட்ட வகை. வாசிப்பின்பம் அளிப்பதை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டது. அதை மீறி யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் கதைகள் சில உண்டு. அவையே முக்கியமானவை. ஆனால் பெரும்பகுதி அப்படி அல்ல.

நீங்கள் மட்டுமல்ல இலக்கிய அடிப்படை அறிந்த பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சுஜாதாவைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை – சில சிறுகதைகளையும் நாடகங்களையும் மட்டுமே கருத்தில்கொள்வார்கள். அது உங்கள் இலக்கிய ரசனையின் தெளிவையே காட்டுகிறது.

நீங்கள் எண்ணுவதே சரி, அவர் இலக்கியவாதி என்பதைக்காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்மபரிசோதனையோ,அறிவார்ந்த தேடலோ,உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப்படமாட்டார்.

சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத்தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்.

இன்று, உயிர்மை வணிக நோக்குடன் சுஜாதாவை வீங்கச்செய்து காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் ஒன்றும் பெரிதாக நீடிக்காது. கடைசியில் வாசகனை நீண்ட நாட்கள் தொடர்ந்து செல்லும் படைப்புகள் மட்டுமே  நிற்கும்.

ஜெ

சுஜாதா நாடகங்கள்

 

சுஜாதா பற்றி

மரபை அறிதல் 1

மாபை அறிதல் 2

கேளிக்கை எழுத்தாளர் – சீரிய எழுத்தாளர்

புதுமைப்பித்தனின் வாள்

சுஜாதாவின் அறிவியல்

சுஜாதாவின் அந்தரங்கம்

சுஜாதாவை கைவிட்டது எது”

விளிம்புகளில் ரத்தம் கசிய-சுஜாதாவின் நாடகங்கள்

சுஜாதா இரு வம்புக்ள்

சுஜாதாவுக்காக ஓர் இரவு

முந்தைய கட்டுரைடொரொண்டோ படங்கள்
அடுத்த கட்டுரைதிருப்பரப்பு