இரு பூதங்கள்

ஜெ

இன்று ஒரு மிகபெரிய மனச் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பற்றிப் படித்துக்  கொண்டிருக்கிறேன் , ஆதலால் பல சுற்றுச் சூழல் துறையில் பணியாற்றும் நண்பர்கள் பழக்கம். அதில் ஒருவரது வீட்டிற்கு இன்று சென்றேன், அவர் சில “பூச்சிக் கொல்லி ஆய்வுத் தொகுப்புகளை ஒரு கண்காட்சிக்காகக் கேட்டிருந்தார் அதைக் குடுக்கச் சென்றிருந்தேன் ” பேச்சு வாக்கில் காஷ்மீர் பிரச்சனை பற்றி ஆரம்பித்து , காஷ்மீர் ஒரு தேசியம் என்றும், அதனை ஈழப் பிரச்னையுடன் ஒப்பிட்டு, இந்தியா ஒரு ஒடுக்கும் நாடு என்று வாதாட முயன்றார்கள். நான் அது முற்றிலும் ஒரு மத அடிப்படையான ஒரு உந்துதல் மிக்க போராட்டம், காஷ்மீர் பண்டிட்டுகள் ஞாயம் யாரும் பேசவில்லை என்றும் ,காஷ்மீர் பண்டிட்டுகள் என்று பேசும் பொழுது அவர்களால் அந்த உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை, உடனடியாகப் பேச்சை மாற்றினார்கள்.பிறகு புரட்சி தான் இந்தியாவிற்கு ஒரே வழி,முழுமையாக இந்திய எதிர்ப்பு கருத்துக்கள்,மாவோயிஸ்ட் அறைகூவல்கள் ,அண்ணா ஹசாரே பற்றி நீங்கள் கூறிய அரைகுறை மதிப்பீடுகள்தான் இவர்களிடம், இது ஒரு புறம் இருக்க .

எனது நீண்ட நாள் நண்பர் ஒரு “ப்ராக்சி ஹிந்துத்வா” செமினார் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் அங்கு ஒருவர், ஒரு புறம் அதே அண்ணா ஹசாரே வசைபாடுகள், உண்மையை நான் அறிந்துவிட்டேன் என்று உரக்க ஏதோ வேதங்களைப் பற்றியும் , விநாயகர் பற்றியும் , உலக விஞ்ஞானத்தை வேதங்கள் என்றோ கூறிவிட்டன என்றும்,பிரம்ஹாவின் நாட்கள் பற்றியும் கூறிக்கொண்டு  இருந்தார், நான் நீங்கள் உண்மையை அறிந்து விட்டீர்கள்  என்றால் எதற்கு அதை நிரூபிக்க  ஒரு உதவி தேவை படுகிறது உங்களுக்கு என்று கேட்டேன், அவ்வளவுதான்  அந்த அரங்கமே வசைபாடுகளாக மாறியது. ஆனால் அவர் கூறிய இந்திய ஜனநாயகம் சந்திக்கும் சவால்கள் என்றும் பேசினார்  ஒரு நல்ல “Investigative Work” ஆக இருந்தது அதையும் நான் அவரிடம்  கூறினேன், அவர் கூறியவற்றில் இருந்து  சில

1)  பிரபஞ்சமே ஒரு ஓம்கார வடிவத்தில் இருக்கிறது , “Nasa Picture” என்று காட்டினார். நடுவில் ஏதோ ஒரு ஒளி அதுதான் கந்தனின் வேல் என்றும்

2 ) மற்றும் பிரமாவின் படைத்தல் தொழில் முடிவடைந்தமையால் அவருக்கு  மனிதர்கள் கோவில் வைக்கவில்லை.

இது மாதிரி அறிவியலையும் இந்திய ஞான மரபையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு குழப்பமாக ஒரு சொற்பொழிவு. நான் அவரிடம் நீங்கள் ஏன் இந்தியா சந்திக்கும் சவால்கள் பற்றி மட்டும் பேச வேண்டும், உங்களது அறிவியல் தத்துவ மதிப்பீடுகள் ஆழமாக இல்லை அதைப் பற்றி நீங்கள் பேசக் கூடாது  என்று கூறியவுடன் அவர் வசைபாடுகளை ஆரம்பித்தார், நான்கு ஐந்து பேர்களாகச் சேர்ந்து ஏதோ நிரூபிக்க முற்பட்டார்கள், என்னை முட்டாளாக மாற்றிவிட்டார்கள் :-) . அவரிடம் ஒரு சமநிலையே இல்லை . என்னையும் கோவப்பட வைத்துவிட்டார்கள்.

இந்த இரண்டு வகை சித்தாந்த மனிதர்களும் எனக்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டார்கள் இன்று . இவர்கள் இருவருமே ஏதோ ஒரு வகை மூளைச் சலவைக்கு தங்களை தாங்களே  அர்ப்பணித்து விட்டதாகத் தோணுது. ஆனால் பொதுவாக இந்த  இரண்டு  சித்தாந்தவாதிகள்தான்  பொதுச் சேவையில் இடுபடுகிறார்கள். இது இவர்களின் வேஷமா, இருவருக்குமே ஒரு அறிவுஜீவிகள் கூட்டம். . பல முகங்கள் இருக்கின்றன இவர்களுக்கு . இது நடுவில் எதை பற்றியும் கவலைப்படாத சினிமா ,கிரிக்கெட் ,வெட்டரசியல் பேசும் கூட்டம். ஒரே குழப்பம். எனது இந்தியா ஒரே கவலை.

மது

அன்புள்ள மது லச்சின்

உண்மையில் என் பிரச்சினையும் இதுவே.

படை பயந்து பந்தளத்துக்கு ஓடிப்போனால் அங்கே பந்தம் கொளுத்திய படை என்று மலையாளப்பழமொழி

இடதுசாரி அரசியலின் குறுகல், மோசடிக்கு எதிராக நின்று இந்துத்துவர்களை கொஞ்சம் காதுகொடுத்தால் இதே மாதிரி அசடு வழிதல்கள். இதற்கு அவர்களே மேல். பேசவாவது முடியும்.

என்ன செய்ய?

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் அறமும்
அடுத்த கட்டுரைஎஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது