ஈழம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் “அப்படி இருந்தும் ஏன் ஈழப்படுகொலைகள் இந்திய மனசாட்சியை உலுக்கவில்லை? “என்று சொல்வது ஓரளவுதான் உண்மை.

1980 களில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா முழுவதும் பரவலாக ஆதரவு இருந்தது . 1983 இனக்கலவரங்களுக்குப் பின் இந்தியா முழவதும், பல மாநிலங்களில் கலவரம் கண்டிக்கப்பட்டு, எல்லா மாநிலத்தவர்களும் நிதி உதவி கூடச் செய்தனர்.

அந்த ஆதரவின் மேல்தான் இந்தியா முதலில் உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து, பின் ராணுவத்தை அனுப்பி இலங்கை அரசுக்குப் புத்தி புகுத்த முயற்சித்தது. இது வரை 1989 இந்தோ-ஸ்ரீலங்க ஒப்பந்தம்தான் ஈழத்தமிழர்களை வலுவாகக் காக்கும் சர்வதேச முயற்சி.

அதற்கப்புறம் , ஸ்ரீலங்கா விவகாரங்களில் இந்திய மக்களின் ஆர்வம் பெரிதும் குறைந்து விட்டது.

விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்

ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாகப் பெண்களின் மனதில் ஒரு பிம்பம் விழுந்துவிட்டது. தமிழ் [இந்தியப்பெண்கள்] அரசியலைக் கவனிப்பதே இல்லை.  ஆகவே எதையாவது கவனித்துப்  பதியவைத்துவிட்டால் மாற்றுவது கடினம்

 

ஜெ

***************

அன்புள்ள ஜெ

இந்தக் கட்டுரையை வாசித்தீர்களா?

ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் NERDO-வாசுதேவன் ஆற்றிய உரை.

மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்குக் கண் என்பது உலகைக் குருடாக்கிவிடும்.
மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராகக் குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாகக்  கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மைச் சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்தச் சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய ஆசுவாசத்தைப் பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

http://thesamnet.co.uk/?p=24759

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

சபா

அன்புள்ள சபா

பசுவும் செத்து மோரில் புளிப்பும் குறைந்துவிட்டது என்பது மலையாளப்பழமொழி. இப்போது  இந்த விவாதங்கள் வெறும் மனக்கசப்பாகவே வளரும்.

காந்தி சொன்னதைக் கேட்கவேண்டியது செயலூக்க நாட்களில். உபவாச நாட்களிலா என்ன?

ஜெ

இந்த மாதங்களில்…

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியும் அறமும்