அன்புள்ள ஜெ,
ஆனால் யாரும் Do you believe in car ? என்றோ Do you believe in electricity? என்றோ கேட்பது இல்லை. ஏன் என்றால் அவை எல்லாம் நிரூபிக்கக்கூடிய அறிவியல் உண்மைகள்.”
கடவுளின் logic for life on earth நம் மனித லாஜிக் போல் இல்லை. இங்கு நேர்மையான நல்லவர்கள் பெரும் துன்பத்திலும். அயோக்கியர்கள் நல்லாவும் இருக்கிறார்கள். ஆன்மா, மறுபிறப்பு, முன்வினை செயல்களுக்கான பலாபலன்கள் என்று தான் (இந்து) ஆன்மீக விளக்கம். ஜோதிடத்தில் அய்ந்தாம் பாவம் இதை தான் சொல்கிறது. இதை நம்புவது சிரமம். ஆனால் எனக்கு தெளிவாக சில patterns தெரிகிறது.”
—
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96
அன்பின் ஜெ..
உலகெலாம் வாசித்தேன்
ஜே ஜேயில் பாலு சொவது போல, “ஒயாமல் மாயக் காம உறுப்புக்களை நம் மீது உரசிக்” கொண்டிருக்கும் மகானுபாவர்கள் இவர்கள். ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லத் துவங்கி, அதிலிருந்து உடனே மக்களைத் திசை திருப்பி, மனத்தின் கீழ்மைகளுக்குத் தொடர்ந்து தீனி அளித்து வருபவர்கள். All they can do is to titillate minds. சாலமன் பாப்பையா இவரின் முன்னோடி. அவ்வளவு நாள் பேராசிரியராகப் பணி புரிந்தவருக்கு, நம் சொத்துக்களின் மதிப்பு தெரியாதது போல் ஒரு பாவனை. கேட்டால், மக்கள் ஆழமாக, சீரியஸாகப் பேசுவதை விரும்புவதில்லை என்று ஒரு அரண் அமைத்துக் கொள்வார்கள் – தங்கள் தொழிலை நியாயப் படுத்த.. நாலு ஃபைட்டு, 6 பாட்டு போல இது ஒரு வெற்றிகரமான வியாபார உத்தி அவ்வளவே. கசக்கிறது.
பாலா