நான் கடவுள், மேலும் இணைப்புகள்

 

அன்புள்ள ஜெ

மீன்டும் சிலநான் கடவுள் விமரிசன இனைப்புகளை அனுப்பியிருக்கிரேன். ஒரு படத்துக்கு இந்த அளவுக்கு விவாதமும் விமரிசனமும் வந்திருப்பதை மிகச்சிறந்த விஷயமாக நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எல்லாரும் அதைப்பற்றித்தான் பேசுகிறாரக்ள்.  அந்த விவாதம் ஒரு சிறந்த விஷயம்தான். பெரும்பாலானவர்களுக்கு நான் கடவுள் ஒரு திகைப்பை கொடுத்திருக்கிறது. இப்போதுதான் அந்த திகைப்பு கொஞ்சம்கொஞ்சமாக பேசிப்பேசி நீங்கி வருகிறது என்று நினைக்கிறேன்

பெரும்பாலான ரசிகர்கள் ஒரு பொழுதுபோக்கு சினிமாவை பார்க்கும் மனநிலையில் நின்று கொண்டுதான்  படங்களை பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. ஆகவே தங்கள் தரப்பிலே எந்த முயற்சியும் இல்லாமல் படம் தங்களை கவர்ந்து ஈர்த்து வைத்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். படத்தை கவனிப்பதே இல்லை. ஆகவேதான் படத்தைப் பற்றி ஆரம்பத்தில் எழுதியவர்கள்  பெரும்பாலான நுட்பங்களை கவனிக்கவே இல்லை

பேசிப்பேசி படத்துக்கு அருகே வந்துவிடுவார்கள் என்றுன் நினைக்கிறேன். என்னுடைய லாபம் என்னவென்றால் கமர்ஷியல் படத்துக்கு உரிய ‘நெஞ்சை உருக்கும்’ மோடில் தான் நாம் எந்த படத்தையும் எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதுதான். பாலா இந்த படத்திலே பிச்சைக்காரர்களைப் பற்றி பரிதாபமே படவேண்டாம், அவர்கள் மனிதர் என்று நினையுங்கள் என்று சொல்ல்கிறார். நம் விமரிசகர்கள் பாலாவுக்கு படல் எடுக்க தெரியாததனால் பிச்சைக்காரர்கள் மேலே பரிதாபமே வரவில்லை என்கிறார்கள்.  ஆனால் இதெல்லாம் ஆரம்பத்தில்தான். இப்போது வருபவர்களுக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை

சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]

அன்புள்ள சண்முகம்,

 உங்கள் கடிதம்.

ஆமாம். பேச்சு எங்கும் இருக்கிறது. ஒருவேளை தமிழில் சமீபத்தில் இந்த அளவுக்கு பேசப்பட்ட படம் வந்ததில்லை. இது ஒரு கலைப்படமாக வந்திருந்தால் இந்த ஆவுக்கு பேசப்பட்டிருக்குமா தெரியவில்லை
ஜெ

http://www.webeelam.net/?p=376

http://www.aol.in/tamil/movies/specials/2009/02/12-naan-kadavul-first-week-bo-repor.html

http://www.narsim.in/2009/02/blog-post_13.html

http://authoor.blogspot.com/2009/02/blog-post.html

http://bakeera.blogspot.com/2009/02/blog-post_08.html

http://thamira-pulampalkal.blogspot.com/2009/02/blog-post_07.html

http://cinetvratings.com/kollywood/movie-reviews.asp?NEWSID=%7B55AF3716-9352-4CCA-B18B-0BCA3A6B46FD%7D&CATEGORYNAME=CRVEW

http://poongulali.blogspot.com/2009/02/blog-post_858.html

http://kaalakannadi.blogspot.com/

http://nirmalbabu.blogspot.com/2009/02/blog-post_7340.html

http://balag8368.blogspot.com/2009/02/blog-post_4877.html

http://nirushan-nirushan.blogspot.com/2009/02/blog-post_08.html

http://arionline.blogspot.com/2009/02/blog-post.html

முந்தைய கட்டுரைகிருத்திகா:அஞ்சலி
அடுத்த கட்டுரைகிருஷ்ணன், புலனடக்கம் :கடிதங்கள்