அரவாணிகள்- இரு பதிவுகள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறும்போது அரவாணிகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவரும். ஒருநாளுடன் அச்செய்திகள் மறைந்துவிடும். அந்த வழிபாட்டுமரபு என்ன, அதையொட்டிய கதைகள் என்ன, சடங்குகள் என்ன, ஏன் அது திருநங்கையருக்கு அத்தனை முக்கியமானதாக ஆகியது என்ற வினாக்கள் எதற்கும் உடனடியாகத் தேடி பதில் கண்டுபிடிக்கமுடியாது.

இரு விரிவான பதிவுகள் தமிழ் விக்கியில் உள்ளன. கரசூர் பத்மபாரதி எழுதிய திருநங்கையர் நூலையும் அ.கா.பெருமாள் எழுதிய நாட்டார் தெய்வங்கள் நூலையும் ஒட்டி உருவாக்கப்பட்ட இப்பதிவுகள் முதன்மையான பண்பாட்டு ஆவணங்கள்.

கூத்தாண்டவர் திருவிழா
அரவான் களப்பலி – அம்மானைப்பாடல்
முந்தைய கட்டுரைதமிழ் விக்கி வம்புகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசொல்மயங்கும் வெளி