‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்

உங்களைப்   பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம்  புகழ் மாலைகளை   சூட்டிக் கொள்ளப் போவதில்லை.  சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை.

இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் பற்றி ஒரு உரை.  சமூகத்தில்  விரவிக் கிடக்கும் ஊழலில் உள்ளபடியே  நமது பங்களிப்பு எவ்வளவு, மீட்க/மீள  என்ன செய்யப் போகிறோம் என அளவிடப் போகிறோம். கேளிக்கை விலக்கிக் கறாரான கருத்துக்களைக்  கேட்க விரும்பும் செவிகளுக்கான கூட்டம் இது.

கூராய்வு செய்ய வருகிறார்  :
‘அரவிந்தன் நீலகண்டன் ‘
(எழுத்தாளர், களப் பணியாளர்,  நாகர்கோவில்  )

இடம்: அரிமா சங்க அறக் கட்டளைக் கூடம் , குருசாமி கவுண்டர் திருமண மண்டபம் பின்புறம், செங்கோடன் பள்ளம், பெருந்துறை சாலை, ஈரோடு
நாள், நேரம் : 19-6-2011, ஞாயிறு மாலை 6 மணி. இறுதியில் கேள்வி நேரம்.

குறிப்பு: நிகழ்ச்சி துல்லியமாகக் குறித்த நேரத்தில் துவங்கும்.

 

அன்புடன்,

ஈரோடு வாசிப்பு இயக்கம்

தொடர்புக்கு : 98659 16970

முந்தைய கட்டுரைகடிதம்
அடுத்த கட்டுரைதொடக்கம்