மேகனாவும் ஷ்ரேயாவும் -கடிதம்

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

அமெரிக்காவில் நீங்கள் சந்தித்த இரு இளம்பெண்கள் பற்றிய குறிப்பு நிறைவை அளித்தது. அமெரிக்கக் குழந்தைகள் பற்றி நீங்கள் எழுதிவந்த அக்கட்டுரைத் தொடருக்கு அவர்கள் பற்றிய கட்டுரை ஒரு பெரிய ஆதாரமாக அமைந்தது. அத்தகைய குழந்தைகள் உருவாகி வருகிறார்கள். அவர்களிடம் நாம் பேசும் நிலையில் உள்ளோமா, அவர்களுக்காக நாம் அறிவை திரட்டி அளிக்கிறோமா என்பதுதான் இன்றைய முக்கியமான கேள்வி. தமிழகத்தின் சில்லறைச் சாதியரசியலையும், அதன் காழ்ப்புகளையும் வெளிநாட்டிலே பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் நாம் அந்த இளைஞர்களைக் கையளிக்கவேண்டுமா என்று நாம் யோசித்தாகவேண்டும்

ராம்சந்தர்

 

அன்புள்ள ராம் சந்தர்

ஷ்ரேயா, மேகனா, இருவருமே நுண்ணிய வாசகர்கள். இருவருக்குமே இந்தியாமேல் ஆர்வமிருக்கிறது. வாசிப்பதற்கும் சிந்திப்பதற்குமான பயிற்சியை அங்குள்ள கல்விமுறை அளித்திருக்கிறது. மேகனா மொழியாக்கம் செய்த என்னுடைய கதையை வாசித்தபோது எத்தனை இயல்பாக அந்த தமிழ்க்கதை, அதன் அனைத்து ஆன்மிகமான, பண்பாட்டுரீதியான குறிப்புகளுடன் அமெரிக்கத்தனமாகவும் உள்ளது என்பதைக் கண்டு வியந்தேன். அந்தக்குழந்தைகளைப்போல என எண்ணிக்கொண்டேன். அவர்களே உருவாகி வரும் தலைமுறையியினர்

 

ஜெ

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

மெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…

முந்தைய கட்டுரையானை டாக்டரும் டாப் ஸ்லிப்பும்- கடிதம்
அடுத்த கட்டுரைகுடவாயில் பாலசுப்ரமணியம் -கோவை புத்தகத் திருவிழா விருது