அசோகவனம் – விமர்சனம்

http://kumarananthan.blogspot.com/2011/06/blog-post.html என்ற இணையதளத்தில் என்னுடைய பெரிய நாவலான அசோகவனத்தின் அளவு பற்றி ஒரு நல்ல விமர்சனக்கட்டுரை வந்துள்ளது. நாவல் வெளிவருவதற்கு முன்னரே கவனிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தது. இதுபற்றிய குழும உரையாடல்

நண்பர் சற்று அதிகமாகவே பீதியடைகிறார். ஒரு நாவலின் அமைப்புக்  குறித்து இந்த அளவுக்கு அவர் கவலைப்படவேண்டியதில்லை. உள்ளடக்கம்தானே முக்கியம். மேலும் நாவலின் பின்னட்டையிலேயே நான்கு நுகர்வோர் எச்சரிக்கை வரிகள் கொடுக்கப்பட்டுளன.

1 நாவலைத் தலைக்குமேலோ அல்லது உயரமான இடத்திலோ வைக்கக்கூடாது

2 நாவலை விரித்து வாசிக்கும்போது நாவல் அளவுக்கே உயரமான முக்காலியில் அமர்ந்து  வாசிப்பது நல்லது

3 நாவலை அதற்கென அளிக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியிலேயே எடுத்துச்செல்லவும்

4.நாவலை ஒருவர் இன்னொருவரை நோக்கி வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.  விளைவுகளுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல

ஆகவே பிரச்சினை ஏதும் இருக்காது

ஜெ

அசோகவனம்

அசோகவனம் முதல் அத்தியாயம்

ஊர்புகுதல் 1

ஊர்புகுதல் 2

ஊர்புகுதல் 3

 

 

முந்தைய கட்டுரைதிரைப்பட விழா
அடுத்த கட்டுரைமார்க்ஸியம்-கடிதங்கள்