அன்புள்ள ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் அண்ணா ஹசாரே பற்றிய
கட்டுரைகளில் RTI அமுல் செய்ததில் அவரே முக்கிய பங்கு ஆற்றியதாகக் கூறியுள்ளீர்கள், அல்லது கூறியது போல எனக்குத் தோன்றுகிறது. அந்த பெருமை
அருணா ராயைச் சேர்ந்ததல்லவா? டைம் இதழின் முக்கிய 100 பேர்களில் அதற்காகவே
அவரை சேர்த்துள்ளனர்
(http://www.time.com/time/specials/packages/article/0,28804,2066367_2066369_2066499,00.html)
இதை பற்றி நான் கூகிள் செய்து படித்ததில், அண்ணா ஹசாரேயின் பங்கு,ராயைக் காட்டிலும் குறைந்ததே என்ற எண்ணமே தோன்றுகிறது. கூட்டு முயற்சியில் யாரின் பங்கு பெரிது என்பது பெரிய விஷயம் இல்லா விட்டாலும், தங்களின்
பார்வைக்குக் கொண்டு வரலாம் என்று தோன்றியது.
நன்றி,
ராஜ்
அன்புள்ள ராஜ்,
உண்மை
நான் அண்ணா ஹசாரேயின் பங்களிப்பைப்பற்றி மட்டுமே சொன்னேன். அவர் மட்டுமே செய்த சாதனை என்று சொல்லவில்லை.
பொதுவாக இத்தகைய சமூகவெற்றிகள் கூட்டுமுயற்சியால் மெல்லமெல்ல நிகழ்வதாகவே அமையும்.
ஜெ
அண்ணா ஹசாரே-1 | jeyamohan.in
அண்ணா ஹசாரே-2 | jeyamohan.in