அன்பு ஜெ, நலம்தானே? நினைவில் நகர்கிறேன்.
தமிழ்விக்கி துவக்க நாளன்று என் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
தமிழில் இருக்கும் விக்கிபீடியா போன்ற தகவல்தளங்கள் சந்தைப்பேட்டை குப்பைக்கூடங்கள் போல உறுதியான தகவல்களும் நம்பகம் அற்ற செய்திகளும் கலந்துகிடப்பவை. தமிழ்ச்சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வகையிலும் உறுதிப்பெறுமானமோ அறுதியான தரவுத்தன்மையோ தரத்தவறுபவை. நீண்டு கிடக்கும் இவற்றை என்ன செய்வது என்று யோசித்தும் யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில், விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு புதிய பாதையை உதயமாக்கியிருக்கிறார்கள். இது கடலை அள்ளி குமிழிக்குள் அடைக்கும் பணி. அள்ள அள்ள விரியும் பணி. ஏறக்குறைய வெண்முரசு போல மிகமிக விரிவான செறிவான பணி.
வெண்முரசு ஜெயமோகன் அவர்களின் தனிப்பட்ட ரதம். தமிழ் விக்கி ஜெயமோகனின் வாழ்வும் படைப்பும் தமிழுக்கு அளிக்கும் நன்கொடை. ஓடிக்கொண்டேயிருக்கும் சூரியதேர். அவருக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் உதவும் தமிழ்ச்சான்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
தற்போது, தமிழ்விக்கியில் என் பக்கத்தைப் பார்த்ததும் உளமகிழ்வு. காலத்தின் துளியாய் கல்வெட்டில் நின்றதைப்போல ஆனந்தம்.
எனக்கும் இதைச்சாத்தியப்படுத்திய விஷ்ணுபுர நண்பர்களுக்கு என் நன்றியும் உங்களுக்கு என் மரியாதையும்.
உறுதியான தகவல்களைத் தமிழ்ச்சமூகத்திற்கு அளிக்கும் அவசியத்தேவையின் மிக முக்கிய முன்னெடுப்பான இந்த தமிழ்விக்கி காலத்தின் பயனாய், பண்பாட்டுச்செறிவாய் என்றும் நிறைந்திருக்கும்.
அன்புடன்
எம்.கே.குமார்
அன்புள்ள குமார்,
தமிழ் விக்கி பக்கங்களில் இளைஞர்களான படைப்பாளிகளின் பக்கங்களைப் பார்க்கையில் அபாரமான ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. அவர்களை இப்படி பதிவுசெய்வதென்பது மிக முக்கியமானது. குறிப்பாக ஆங்கில மொழியாக்கம் தேவை
இங்கே சிலர் திரும்பத் திரும்ப பல அமைப்புகளுக்குள் முட்டி மோதுவது என்பது ஆங்கிலத்தில் ஒரு புரஃபைல் உருவாக்கி கொண்டமையால் மட்டும்தான். சிற்றிதழ் சார்ந்து தீவிரமாக எழுதுபவர்களுக்கு அந்த புரஃபைல் இல்லை. உருவாக்க விடமாட்டார்கள். ஏனென்றால் ஆங்கிலம் வழியாக தமிழிலக்கியத்தை அறிபவர்களுக்கு இங்கே என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
தமிழ்விக்கி அந்த மொனோப்பொலியை உடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இது ஒரு பெரிய தகவல்தொகுப்பாக ஆகிவிடும். இதை தவிர்த்துவிட்டு தமிழிலக்கியம் பற்றி பேச முடியாது
ஜெ
- அகரமுதல்வன்
- அக்கினி சுகுமார்
- அனோஜன் பாலகிருஷ்ணன்
- அமிர்தம் சூர்யா
- அம்பேத்கர்பிரியன்
- அராத்து
- அரிசங்கர்
- இசை (கவிஞர்)
- இளங்கோ கிருஷ்ணன்
- இரா. கவியரசு
- என்.சொக்கன்
- என்.ஸ்ரீராம்
- எஸ். சுரேஷ்
- எஸ். செந்தில்குமார்
- கடற்கரய்
- கண்டராதித்தன்
- கமலதேவி
- கல்பனா ஜெயகாந்த்
- கார்த்திகைப் பாண்டியன்
- கார்த்திக் பாலசுப்ரமணியன்
- கார்த்திக் புகழேந்தி
- காலசக்கரம் நரசிம்மா
- காலத்துகள்
- கி.ச. திலீபன்
- கிருஷ்ணமூர்த்தி
- கீரனூர் ஜாகிர்ராஜா
- குமாரநந்தன்
- கே.என்.சிவராமன்
- கே.ஜே. அசோக்குமார்
- கே.வி. ஜெயஸ்ரீ
- கே.வி.ஷைலஜா
- கோகுல் பிரசாத்
- கொள்ளு நதீம்