அன்புள்ள ஜெயமோகன்,
சரவணன் என்பவருக்கு மே 13ல், சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் அங்கு சென்று ஒரு வாரம் தங்கினேன். எனக்குப் பொதுவாக நவீன அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு நண்பர் இந்த இடத்தைப் பற்றிக் கூறினார். உங்களது இயற்கை உணவு பற்றிய கட்டுரையையும்
படித்திருந்தேன். நீங்கள் பழங்களை மட்டும் மாலை/இரவு உணவாகக் கொள்வதால் அடைந்த பலன்களைப் படித்தது, இதை முயற்சிக்க ஒரு சிறிய நம்பிக்கை கொடுத்தது.
இங்கு தங்கி, சில நாட்கள் முழு உண்ணாவிரதம் இருந்து, பிறகு சமைக்கப்படாத இயற்கை உணவை உண்டது எனது உடல் நிலையில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுத்தது. மாற்றுமருத்துவ முறைகளைத் திறந்த மனத்துடன் அணுக வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது.
திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் மகன், டாக்டர் திரு. நல்வாழ்வு (அவரின் பெயரே நல்வாழ்வுதான்), ஆசிரமத்தை நடத்தி வருகிறார். அவர் ஒரு Bachelor of Naturopathy and Yogic Science (BNYS) பட்டம் பெற்ற டாக்டர். ஆசிரமத்தில் ஒரு சிறிய நூலகமும் இருக்கிறது. சரவணன் கேட்கும் புத்தகம் அங்கு இருக்க கூடும்.
விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியை சரவணனுக்கு தெரிவிக்கவும்.
http://universalgoodlife.webs.com/aboutme.htm
இனைய தளம் இயங்கவில்லை என்றால் தொடர்புக்கு, ஆசிரம முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கீழே கொடுத்துள்ளேன்.
நல்வாழ்வு ஆசிரமம்
கல்யாணிபுரம்
ஆழ்வார்குறிச்சி (VIA)
சிவசைலம் 627412
திருநெல்வேலி
(04634)-283484
94430 43074
நன்றி.
அன்புடன்,
-S. Krishnan.
இயற்கை உணவு : என் அனுபவம்