தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு ஏன் மிகக் குறைவாக இருக்கிறது? ஆனால் இந்த கேள்வியே ஒருவகையில் பிழையானது. தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக பதிவாகியிருக்கிறது. பல காரணங்கள். முதன்மையானது நம் பொதுவிவாதக்களத்திற்கு வெளியே பெண்களின் குரல் ஒலித்தது என்பது. நாம் ஆவணப்படுத்திய வரலாற்றுப்புலத்தின் எல்லைக்குள் அவை இல்லை.
தமிழ்விக்கி சீராக அனைத்துப் பெண்களின் பங்களிப்புகளையும் வரலாற்றுப் பதிவாக்குகிறது. நாளை இது ஒரு பெரும் ஆவணத்தொகையாக இருக்கும். எம்.எஸ்.கமலா அவர்களில் ஒருவர். நிறைய எழுதியவர். அனேகமாக எந்த எழுத்தும் இன்று கிடைப்பதில்லை. ஆனால் தேடினால் கிடைக்கலாம்.1965, 1966-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இவர் பணிபுரிந்திருக்கிறார்.தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர்.
மேலதிகச் செய்திகளை எவரேனும் அனுப்பிவைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
எம்.எஸ்.கமலா
- அசலாம்பிகை
- அம்மணி அம்மாள்
- அழகியநாயகி அம்மாள்
- ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்
- ஆர்.சூடாமணி
- ஆர்.பொன்னம்மாள்
- எஸ். விசாலாட்சி
- எஸ். அம்புஜம்மாள்
- கமலா சடகோபன்
- கமலா பத்மநாபன்
- கமலா விருத்தாசலம்
- கிருத்திகா
- கிருபா சத்தியநாதன்
- கி.சரஸ்வதி அம்மாள்
- கி.சாவித்ரி அம்மாள்
- கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
- குகப்பிரியை
- குமுதினி
- கெளரி அம்மாள்
- சகுந்தலா ராஜன்
- சரஸ்வதி ராம்நாத்
- சரோஜா ராமமூர்த்தி
- செய்யிது ஆசியா உம்மா
- செய்யூர் சாரநாயகி அம்மாள்
- ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
- டி.பி.ராஜலட்சுமி
- நீலாம்பிகை அம்மையார்
- மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்
- மீனாட்சிசுந்தரம்மாள்
- வி. விசாலாட்சி அம்மாள்
- வி.சரஸ்வதி அம்மாள்
- விசாலாட்சி அம்மாள்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- ஹெப்சிபா ஜேசுதாசன்