ஆறுமுகப்பெருமாள் நாடார், நாட்டாரியல் உ.வே.சா.

1998 முதல் அ.கா.பெருமாள் அவர்களை அனேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அ.கா.பெருமாளின் பேச்சில் வந்துகொண்டே இருக்கும் பெயர்களில் ஒன்று ஆறுமுகப்பெருமாள் நாடார். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்தபோது ஆவேசமாக “உ.வே.சாவை மட்டுமே போற்றுறோம்…  ஆறுமுகப்பெருமாள் நாடாரை மறந்திடறோம். ஏன்னா நம்ம மனசுலே கிளாஸிசம்தான் தேவைன்னு பதிஞ்சிருக்கு” என்றார்

அவரிடம் ஆறுமுகப்பெருமாள் நாடார் பற்றி ஒரு கட்டுரை எழுதித்தரச்சொல்லி சொல்புதிது இதழில் வெளியிட்டோம். ஆறுமுகப்பெருமாள் நாடார் பற்றிய விரிவான வாழ்க்கைக்குறிப்பு முதல்முறையாக அச்சேறுவது அப்போதுதான் என நினைக்கிறேன். அக்குறிப்பின் விரிவாக்கம் பின்னர் அ.கா.பெருமாளின் நூலில் இடம்பெற்றது.

இப்போது அது தமிழ் விக்கி வழியாக வரலாற்று ஆவணமாகியுள்ளது

ஆறுமுகப்பெருமாள் நாடார்

ஆறுமுகப்பெருமாள் நாடார்
ஆறுமுகப்பெருமாள் நாடார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅமெரிக்கா, கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைலோலோ