என்னுடைய வாசகர் திரு புகழேந்தி, இன்று சங்கீதாவை மணக்கிறார். திருமணம் ஓமல்லூரில் நிகழ்கிறது. இணையதளம் மூலம் தொடர்புகொண்டவர் புகழேந்தி. திருமணத்தை ஒட்டி அனைத்து விருந்தினர்களுக்கும் என்னுடைய சங்கசித்திரங்கள், விருந்துப்பரிசாக அளிக்கப்படுகிறது.
புகழேந்திக்கும் சங்கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்துச்செல்வங்களும் அடையப்பெற்று நிறைவான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்.