ஆழிசூழ் உலகு- நவீன்

தமிழின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களில் ஒன்றான ஆழிசூழ் உலகு வெளிவந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அதன் இரண்டாம் பதிப்பும் விற்று முடியும் நிலையில் உள்ளது. இந்நாவல் இன்று தமிழின் தேர்ந்த வாசகர்களால் ஓர் இலக்கிய சாதனையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.

ஜோ டி குரூஸ்

தமிழில் இது ஓர் அற்புதம். தமிழில் வருடம் தோறும் இவ்வாறு வெளி வரும் பல நூல்களில் சில மட்டும் இலக்கிய அங்கீகாரம் பெறுகின்றன. நிலை நிற்கின்றன. ஆனால் தமிழ்ச் சிற்றிதழ்களிலும், இந்தியா டுடே போன்ற இதழ்களிலும் வெளிவரும் பெரும்பாலான மதிப்புரைகள் ஆசிரியர, பதிப்பாளரோ உருவாக்கக் கூடியவை. போலிப் பகட்டுச் சொற்கள். ஆழமான, விரிவான விமர்சனங்கள் பெரும்பாலும் வருவதில்லை. அப்படியானால் எப்படி இலக்கிய மதிப்பீடு நிலை நாட்டப் படுகிறது? தொண்ணூறு சதம் வாய் வார்த்தைகள் மூலம். அவ்வப்போது சொல்லப் படும் சில வரிகள்,  குறிப்பிடத் தக்க சிலர் போடும் பட்டியல்கள் அந்த மதிப்பீட்டை நிலை நாட்டுகின்றன.  ஆழிசூழ் உலகு அவ்வாறு வாசகர்களே அங்கீகரித்த படைப்பு.

ஆழிசூழ் உலகு பற்றி மலேசியாவின் இளம் இலக்கியவாதியான நவீன் எழுதிய மதிப்புரை வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது. ஆழிசூழ் உலகு பற்றி எழுதப்பட்ட  அந்தரங்கமான, ஆழமான விமர்சனம்!

http://www.vallinam.com.my/issue30/navin.html

 

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு

 

விமர்சனங்கள் ஜி சிவக்குமார்

 

ஜோ டி குரூஸ் பேட்டி

 

முந்தைய கட்டுரையானை டாக்டர்
அடுத்த கட்டுரைவிதி-கடிதம்