சுரா 80

கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இம்மாதம் ஜூன் 3, 4, 5 தேதிகளில் சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளைக் காலச்சுவடு இதழ்,சு.ரா 80 என்ற பேரில் நிகழ்த்துகிறது. அனேகமாகத் தமிழின் எல்லா எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும்,நாடகவியலாளர்களையும் கூட்டி ஒரு திருவிழாவாகவே இந்த நிகழ்ச்சியைக் காலச்சுவடு ஒருங்கமைத்துள்ளது. இலங்கை ,ஃப்ரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்தும்கூட எழுத்தாளர்கள் விழாவுக்கு வரவிருக்கிறார்கள்.

முத்து நெடுமாறனுக்கு [மலேசியா] தமிழ் கணிமைக்கான சுரா விருது வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமியின் நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுராவைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் நிகழ்த்தும் நினைவுச்சொற்பொழிவுகள் உள்ளன.காலச்சுவடு வெளியீடாக வரும் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் திரும்பிச்சென்ற தருணம் என்ற நூலை நான் வெளியிடுகிறேன்.

கண்ணன்,கெ.சச்சிதானந்தன் [மலையாளக்கவிஞர்],சுகுமாரன், அருட்தந்தை ஜெயபதி, டிராட்ஸ்கி மருது, வே.வசந்திதேவி, மு.நித்யானந்தன், [பிரிட்டன்] கி. நாச்சிமுத்து, ஜெ பி சாணக்யா, கெ. என் செந்தில், சுகிர்தராணி, கடற்கரை, தீபசெல்வன்,சக்தி ஜோதி, சே.ராமானுஜம், உமா வரதராஜன் [இலங்கை] அ.பத்மநாபன், ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், பி.தனபால், நெய்தல் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், பாவண்ணன், தண்டபாணி, தேவேந்திர பூபதி, சிபிச்செல்வன், ரவி சுப்ரமணியன், அனிருத்தன் வாசுதேவன், தங்கு ராம், கவிதா முரளிதரன், பிரபஞ்சன், பெருமாள்முருகன் , பி.ஏ.கிருஷ்ணன், உமையொருபாகன், என் கெ விக்கினேஸ்வரன் [இலங்கை]  , ச.தமிழ்ச்செல்வன், நீல.பத்மநாபன், தோப்பில் முகமது மீரான், கொடிக்கால் அப்துல்லா, ஆ.மாதவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சை பீர்முகமது [மலேசியா] அ.கா.பெருமாள், து.குலசிங்கம் [லண்டன்] கலாப்ரியா ,பெருந்தேவி, ப்ரியா தம்பி, பா.மதிவாணன், இரா சின்னச்சாமி, அ.யேசுராஜா[ இலங்கை] தொ.பரமசிவன், பிரேம், மணா, களந்தை பீர்முகமது, க பஞ்சாங்கம், ஆனந்த், ஸ்டாலின் ராஜாங்கம், க.பூணசந்திரன்,  பொவேல்சாமி, அரவிந்தன், குமாரசெல்வா, யுவன் சந்திரசேகர், தமிழவன், எம் கோபாலகிருஷ்ணன், பழ. அதியமான், சு.ராஜாராம்,  செ.ரவீந்திரன்,குவளைக்கண்ணன், அ.ராமசாமி, ந.முருகேசபாண்டியன், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்

 

சுந்தர ராமசாமி:நினைவின் நதியில்

சுந்தர ராமசாமி இணைய தளம்

சுந்தர ராமசாமி விருது2009

காலச் சுவடு நூறாவது இதழ்

 

முந்தைய கட்டுரைகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்
அடுத்த கட்டுரையானை டாக்டர்