ஐரோம் ஷர்மிளா-கடிதம்

வணக்கம்,

அற்புதமான கட்டுரை. இதுநாள் வரை comunisam சார்ந்த பத்திரிகைகள் படித்து ஒரு தவறான புரிதலில் இருந்துள்ளேன் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த 24×7 இந்திய ஆங்கில மீடியா இப்படி தொடர்ந்து இந்த நாட்டிற்கு துரோகம் செய்வது மிகவும் கொடுமையான விஷயம். இதைத் தட்டிக் கேட்க  யாரும் இல்லை.

எனக்கு மற்றுமொரு கேள்வி. உலக அளவில் இனக் குழுக்கள் என்ற ஒன்று இருந்தால் அந்த இனக் குழுக்கள் இடையே நடக்கும் சண்டையைப் பெரிது படுத்தி அதன் மூலம் மத மாற்றம் மற்றும் அந்த இடத்தில உள்ள வளங்களை மேற்கத்திய நாடுகள் சுரண்டுவதற்குத் துணைபோதல் முதலிய வேலைகளை கிறித்துவ மிஷினரிகள் செய்கின்றன். என்னைப் பொறுத்தவரை தற்பொழுது சாதிய ரீதியில் அரசியல் வாதிகளுக்கு அடுத்து அதிகம் பயன் பெறுவது கிறித்துவ மிஷினரிகள் என்பது என்னுடைய கருத்து. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சூடான்.

ஒரு நாட்டைப் பிளப்பது என்றால் கிறித்துவ மிஷினரிகளுக்குப் பிடித்தமான விஷயம். வட கிழக்கு மாநிலங்களில் இந்தப் பிரச்னையில் மிகப்பெரிய அளவில் கிறித்துவ மிஷினரிகளும் மற்றும் சீனா அரசாங்கமும் உள்ளது என்று நினைக்கிறேன்.

கிறித்துவ மிஷினரிகளுக்கும் (பெரும்பான்மையான), இந்திய கம்யூனிஸ்ட் மக்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கம் இந்தியாவைப் பிளப்பது. இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

வினவு என்ற ஒரு வலைத் தளம் போதும் இந்தக் கயவர்களின் கெட்ட புத்தியைத் தெரிந்து கொள்வதற்கு. இந்த வலைத் தளத்தில் தெரியாத்தனமாகச் சென்று பின்னூட்டம் இட்டு எனது நேரத்தைப் பலமுறை வீணடித்து இருக்கிறேன்.

நான் இதைப் பற்றிப் படிக்கும் பொழுது கீழ்க் கண்ட வலைத் தளம் எனக்குக் கிடைத்தது.
http://www.satp.org/

கிறித்துவ மிஷினரிகள் இதன் பிரச்சனைகள் மூலம் பெருமளவு மத மாற்றத்தைச் செய்கின்றன என்று நினைக்கிறேன். இந்தப் பழங்குடியினர் ஹிந்துக்களாகக் கருதப் படுகிறார்களா அல்லது  இவர்கள் தனிப்பட்ட மதமாகக் கருதப்படுகிரார்களா? இது குறித்துத் தங்கள் கருத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு
ஸ்ரீகுமார் செட்டி

 

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

 

முந்தைய கட்டுரைவாசிப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்