வரும் ஜூலை 8,9,10 – 2011 தேதிகளில் ஊட்டி [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு காவிய முகாம் நடத்தவிருக்கிறோம். தமிழ், சம்ஸ்கிருத, ஐரோப்பிய காவியங்களில் ஒவ்வொன்றை ஓரளவு அறிமுகம் செய்துகொள்வதுடன் காவியயியலைப் பொதுவாக அறிமுகம் செய்துகொள்வதும் நோக்கம்.
ஏற்கனவே நண்பர்குழுமத்தில் இதை அறிவித்து 35 பேர் முன்பதிவுசெய்திருப்பதனால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் இனிமேல் இடமிருக்கும். வரவிருக்கும் நண்பர்கள் இந்தப் பட்டியல் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.
மேல் விவரங்களுக்குப் பழைய பதிவுகளைப்பார்க்கலாம்
—