திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்
பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்
திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன்.
உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது.
பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே சிறகுகள். சீனாவிலிருந்து கிளம்பி இந்தியக் கோயில்களில் வந்து தும்பிக்கையுடன் அமரும் வழியில் …
புதிய கட்டிடம்தான். ஆனால் பழைய மரக்கட்டிடங்களில் உள்ள உத்தர நுனிகள் செயற்கையாக அமைப்பட்டுப் பூட்டானியத் தனித்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது
முன்பு இப்படி இருந்திருக்கலாம்
படங்கள்