மா.கிருஷ்ணன், அவருடைய முன்னோடிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு வெளியீடாக ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூல் வெளிவந்தது. தியடோர் பாஸ்கரன் முயற்சியால் வெளிவந்த நூல் அது. அது தமிழில் ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்தது. ஒரு புனைவல்லா நூல் கவிதைநூலுக்கு இணையாக படிக்கப்பட்டது என்றால் மா.கிருஷ்ணனின் அந்நூலைத்தான் சொல்லவேண்டும்.

மா.கிருஷ்ணன் அ.மாதவையாவின் மகன். அவர் சகோதரி வி.விசாலாட்சி அம்மாள் எழுத்தாளர். மா.கிருஷ்ணன் இந்திய சூழியலாளர்களின் முன்னோடி. அவரைப் பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு அவருடைய ஆங்கிலேய முன்னோடிகளை நோக்கிச் சுட்டி அளிக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டு அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளிகள். நாம் சற்றும் அறியாதவர்கள். ஆனால் மறக்கக்கூடாதவர்கள். பிலிப் ஃபைசன், ஆல்பர்ட் பௌர்ன் , எமிலி பௌர்ன் அவர்களைப்பற்றி தமிழில் முதல்முறையாக ஏதேனும் எழுதப்படுகிறது என நினைக்கிறேன்.

மா. கிருஷ்ணன்

 

 

மா. கிருஷ்ணன்
மா. கிருஷ்ணன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைநாகை புத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரைநமது அமெரிக்கக் குழந்தைகள்-2