காடு,வாசிப்பு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயன்,
இயற்கை உணவு பற்றிய உங்கள் கட்டுரை ஒன்றை படித்தேன்.(http://www.jeyamohan.in/?p=373 ) அதில் ஒரு ஆசிரியரைப் பற்றியும் அவரது புத்தகத்தைப் பற்றியும் (நோயின்றி வாழ முடியாதா) குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மலையாளத்தில் மொழிபெயர்த்ததாகவும் கூறியுள்ளீர்கள்.
அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆவலாக உள்ளேன். அதைப் பற்றிய தகவல்களை அளிக்க இயலுமா?
நன்றி.
பேரன்பு,
சரவணன்
அந்த நூலை எழுதியவர் ராமகிருஷ்ணன். அவர் அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் என்ற ஒன்றை நடத்தி வந்தார். இப்போது அவர் இல்லை. அவரது மகன் இருக்கிறார் என நினைக்கிறேன்

ஜெ

hi jeyamohan sir,

காடு நாவலில் மலையாள பாஷை புரியவில்லை. தமிழ் நாவலில் எதற்கு மலையாள பாஷை? எந்த தமிழ் வாசகனுக்கு மலையாளம்? காடு எனக்குப் பிடித்திருந்தது. என் அத்தைப் பையனும் அதைப் படித்துக் கொண்டு இருக்கிறான். அவனும் மலையாள பாஷை வரும் பக்கங்களைப் படிக்காமல் தாவுகிறானாம். இரவு நாவலை நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

என் வீட்டில் கம்யூட்டர் கிடையாது. அவ்வப்போது internetடிற்கு வருவேன். வந்தால் உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் என்ன தெரிகிறதோ அதைப் படிப்பேன். போன வாரத்தில் முதல் பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் படித்தேன். முக்கியமான கட்டுரை அது என்று பட்டது. ஒருவேளை இந்த மாதம் முழுதும் நான் நெட்டிற்கு வராமல் போயிருந்தால் அக்கட்டுரையை நான் miss செய்திருக்கும் படியாக ஆகியிருக்கும். இயந்திரமும் இயற்கையும், மனப்பிழைகள் பத்து போன்ற உங்களின் important கட்டுரைகள் கூட மிக எதேச்சையாக என் கண்ணில் பட்டவையே.

என்னைப் போன்ற  netட்டிற்கு தினமும் வராதவர்கள் பலரும் உண்டு. அவர்கள் யாவருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

1. இதுவரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கிய கட்டுரைகள் எவையோ அவற்றிற்கான url களை தனியாக ஒரு static pageல் தர வேண்டும்

(அல்லது )

2. முக்கிய கட்டுரைகள் என்ற categoryயையாவது additionalஆக‌ உருவாக்க வேண்டும்.
(அல்லது)

3.  குறைந்த பட்சம் உங்கள் பிளாகின் right side barல் இந்த monthத்தின் முக்கிய கட்டுரைகள் என்று தலைப்பிட்டு முக்கிய கட்டுரைகளை குறிப்பிட வேண்டும்….

please do the steps needed…thanks for reading……

மகிழ்
அன்புள்ள மகிழ்
காடு நாவல் கேரள-தமிழ் எல்லையில் உள்ள மலையில் நிகழ்கிறது. அது மலையாள மொழி அல்ல.  பழங்குடிகளின் மொழி அது. தமிழின் தொன்மையான வடிவம் எனலாம். அந்த மக்களை அந்த மொழியில் இருந்து பிரிக்க முடியாது. அவர்கள் வேறு எந்த மொழி பேசமுடியும்? சுத்தத் தமிழ் பேசினால் அந்த மக்கள் அவர்களின் சாயலில் இருப்பார்களா என்ன?
நீங்கள் உண்மையிலேயே காட்டுக்குச் சென்று அவர்களிடம் பேசினால் அவர்கள் அப்படித் தானே பேசுவார்கள்? அதை முயற்சி செய்து புரிந்து கொள்வீர்கள் அல்லவா? வாசிப்பு என்பது ஒரு புத்தகம் உங்களிடம் வருவதல்ல. நீங்கள் ஒரு புத்தகத்திற்குள் செல்வது தான். அந்த புத்தகம் வழியாக உண்மையிலேயே அந்த மலைக் காட்டுக்குள் செல்கிறீர்கள்
என் இணையதளத்தில் எல்லா கட்டுரைகளுமே முக்கியமானவை. அதிகமான வாசகர்கள் வாசித்த கட்டுரைகளை விட அதிகம் வாசிக்கப் படாத நல்ல கட்டுரைகள் உள்ளன. எப்படி தேர்வு செய்வது? நான் வாசகர்களை நம்புகிறேன்
ஜெ
முந்தைய கட்டுரைஇந்த மாதங்களில்…
அடுத்த கட்டுரைகீதை, சம்ஸ்கிருதம், ஸ்மிருதிகள்