ஜக்கி-கடிதங்கள்

ஜெவுக்கு அன்பு வணக்கங்கள்,

அண்மையில் உங்கள் வலைதளத்தில்   வெளியான, ஜக்கியை பற்றிய பதிவை வாசித்தேன்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KcNXUhRijp0

இந்த Video ஈஷா செயல் படும் விதத்திற்கும், தன்னார்வ தொண்டர்களின் உண்மைக்கும்  ஓர் வெளிப்படையான எடுத்துக் காட்டு.

அடுத்த முறை நீங்கள் தில்லை செல்லும்போது, முற்றிலும் அழகான தில்லையைப் பார்ப்பீர்கள்.

-அசோக்

ஹலோ J,

ஜக்கி என்பவர் இந்த சமுதாயத்திற்கு தற்பொழுது மிகவும் தேவையான சேவையைத் தருகிறார் என்று நான் உறுதியாய் நான் கூற முடியும்(அது போலவே Ravishankar ,art of living முக்கியமானதே)இஷா என்ற அமைப்பு  இல்லையென்றால் நான் ஆன்மிகம் பற்றி எந்த அறிவும் இல்லாமலே வாழ்ந்து கொண்டிருப்பேன்

அடிப்படையில் ஆரம்பித்து பல level களில் வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

இதன் முலமே நான் எனது மனம்,  உடல் அல்ல என்பதை உணர முடிந்தது .

இதுவே என்னைத் தேடலுக்குத் துண்டியுள்ளது.  ஏற்கனவே Swami விவேகானந்தரின்  ஞான யோகம் நூல் இருந்தாலும் ஒரு 5 பக்கங்களை கூட படிக்க என்னால் இயலவில்லை (புரிந்து கொள்ள முடியவில்லை) .

isha வகுப்பிற்கு பின்னர் முழுவதும் படித்து விட்டேன்.  ராஜ யோகம் கூட படிக்க முடிகிறது.

உங்கள் ஆன்மிகம் சம்பந்தமான கட்டுரைகளை தேடிப் படிக்கவும் அதுவே காரணி.

இந்த சமூக சுழலில் நாம் இந்த தேடலை வேறு எவ்வகையில் தரமுடியும்?

மேலும் நிறைய இது பற்றி பேச விரும்புகிறேன்.

ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து,  நீங்கள் கூட அவரை  உபயோகப் படுத்தும் படி நான் விரும்பி கேட்டுக் கொள்கிறேன் – உங்கள் தேவைகேற்ப INTENSE வழி முறைகளை தர வாய்ப்பு ஊள்ளதே .

அவர்கள் கூற்றுப்படிஅமைப்பு – ஆன்மிக பரவலுக்கான ஒரு முதலீடு –

ஆரம்ப நிலையிலிருந்து  உயர் (தீவிர) நிலை  வகுப்புகள்  உள்ளன .

GENERALISED தான்   BUT VERY EFFECTIVE.

இதில்  நீங்கள கூறிய நீர்த்து போகுதல் என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன்.

(நீங்கள் விரும்பினால் நான் மேலும் இது பற்றி பேசுவேன்)

மரபின் மைந்தன் அவர்களுடன் இது பற்றி நீங்கள் என்ன விவாதித்து உள்ளீர்கள்?

அவர் முலம் ஒரு 3-5+ நாட்கள் அவருடன் நீங்கள் இருக்க வேண்டும் என்பது என் பேரவா.

அவரை போல் enlightened (வெளி உலகத்திற்கு தெரியாமலே )  பலர் உள்ளனர் என்பதும் ,  enlightening  என்றால் என்ன என்பதுமே இந்த அமைப்பின் முலமே எனக்கு  சாத்தியமானது .

jesus  , budhhar , adi sankarar  போல  அவ்வப்போது சிலர் வருவது எப்படி எளிதாக மறுக்க முடியும்

சம காலத்திலியே  அம்மா பகவான் , பங்காரு அடிகளார், புட்டபர்த்தி சாய் பாபா  முதல்  பாபா ராம்தேவ் ,  ரவி சங்கர் , வேதாத்ரி மகரிஷி   இன்னும் ஏராளமான குருமார்கள் வெளியில் வந்துசெய்வது (different level, different method )  உபயோகமில்லை என்று எப்படி கூற முடியும் ( ஒரு காலத்தில் நானே அப்படி நினைத்தவன்தான்)

அதாவது உண்மையான தாக்கம் ஏற்படுகிறது . இதை நீங்கள் எப்படி குறைவாய் மதிப்பிடமுடிய்ம்

ஜெய் அண்ணா!, பல வேறுபட்ட விசையங்களை பேச , அறிய வாய்ப்புக்கு கொடுத்தற்கு நன்றி

நீங்கள் இதை படிப்பது மட்டும் இன்றி   உங்கள் site ல் posting செய்வது இரட்டிப்பு மகிழ்ச்சி

இப்போ ஒரு பாயிண்ட் தலை: (eureka!)

எப்படி உங்களுக்கு உங்கள் இணைய தளமோ அது போல jaggi க்கு ஒரு isha.

With regards

Karthik

***

அன்புள்ள ஜெ.

நான் உங்களிடம் பல காலமாக ஜக்கி பற்றி கேட்க நினைத்த கேள்வி ப்ரியா கேட்டுள்ளார்.

2008 ல் உங்கள் நிலைப்பாடு

/ஜக்கி வாசுதேவை எப்போதாவது ஒருமுறை சந்திக்க வேண்டும்.//

தற்சமயம் (2011) அளித்த பதில் ஒன்றில்

//ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் சந்திக்கவில்லை. சந்திக்கும் எண்ணமும் இல்லை.//

//பொதுவாக இம்மாதிரி அமைப்பு சார் குருநாதர்கள் தனிப்பட்ட வாசிப்பும் தேடலும் கொண்டவர்களுக்கு பெரிதாக உதவுவதில்லை என்பது என் எண்ணம்//

2008 ல் கூட அவர் ஒரு அமைப்பை சார்ந்து தானே இருந்தார் ?

2008 ல் இருந்த ஒரு மெலிதான ஆர்வம் கூட தற்போதைய தங்கள் பதிலில் இல்லை. இதன் காரணம் என்ன என்று அறிந்து கொள்ளலாமா? இது எனக்கு தனிப்பட்ட அளவில் சில தெளிவுகள் அளிக்கும் என்பதால் கேட்கிறேன்

——-

நான் அவர் நூல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன் , அவர் உரைகளை அடங்கிய காணொளிக் காட்சிகளைக் கண்டுள்ளேன். அந்த அமைப்பில் தொண்டாற்றும் சிலரை அறிவேன். இஷா மையத்திற்கு சில முறை சென்றிருக்கிறேன் (எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றதில்லை ).

என்னளவில் ஜக்கியையும் அவர் அமைப்பையும் பிரித்தே பார்த்து வந்துள்ளேன்.

எனக்கும் அமைப்பு சார்ந்த ஆன்மீக இயக்கங்களில் ஒருவித ஒவ்வாமை உண்டு. அவர் அமைப்பு நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் வகுப்புகளில் பெரிதாக ஆர்வம் ஏதும் இல்லை.

நான் எழுத்திலும் , உரையிலும் கண்டு கொண்ட ஜக்கியே ( his wisdom ) போதுமானதாக இருக்கிறார்.

அதிலும் பல விஷயங்களுக்கு (லிங்கம் அமைத்தல் , முற்பிறவி ஞாபகம்) போன்ற விஷயங்களில் நிறைய reservations உண்டு. (அது உண்மையா இல்லையா என்பது கூட என் சிக்கல் அல்ல அதை மற்றவர்களுக்கு எந்த விதத்தில் relevant என்ற கோணத்தில்). சில சமயங்களில் அவர் எல்லாருக்கும் எல்லாமுமாக இருக்க நினைக்கிறாரா என்றும் தோன்றியிருக்கிறது.

இது பற்றி நண்பர்களின் கருத்துக்களையும், அனுபவத்தையும் அறிந்து கொள்ள இதைக் குழுமத்திலும் பதிகிறேன்.

நன்றி

கார்திக்

 

முந்தைய கட்டுரைநமது சிற்றிதழ்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈழப் படுகொலைகள்,காலச்சுவடு