மே தினம்-கடிதங்கள்

மே தினக் கட்டுரை -விழித்திருப்பவனின் கனவு

ஆசிரியருக்கு,

கற்பனையின் வண்ணங்களும், எதார்த்தத்தின்  சாத்தியமும் சரி பாதி கலந்ததே கனவு. இதில் கற்பனை சாத்தியப் படலாம், எதார்த்தம் கனவாகிப் போகலாம். வெற்று வரலாற்றில்  துவங்கி ஒரு செழுமையான  தரிசனத்தில் போய் முடிந்த இக்கட்டுரை, வறண்ட பாலையிலிருந்து புறப்பட்டு  ஒரு மழைக் காட்டின் முன் சொல்லற்று நிற்கும் ஒரு நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை வழங்கியது. கட்டுரை முடிந்ததும் நிறங்களில் திளங்கும் ஒரு நீர்க் குமிழி உடைந்தது போல, ஒரு  இனிய கனவு முடிந்து போனத் துயரம்.

Formulae போல் முதலாளி- தொழிலாளி, உற்பத்திக் கூலி உறவுகளை கூறுகிறீர்கள். படிக்கும் போதே மனம் ஒப்புக் கொள்கிறது. இதில் தர்மம், நியாயம், மானுடத்திற்கெல்லாம் இடமில்லை, பேரமும் கையிருப்பும் மட்டுமே இங்கு செல்லும்.   ஒரு நோக்கில் இக்கட்டுரை கூறுவது முதலாளி- தொழிலாளியையும், அவன் முதலாளியையும் சுரண்ட முயலும் சமன்பாடே நவீன தொழிலும் உற்பத்தியும், அதே போல்  நுகர்வோர் இந்த மேற் சொன்ன சக்திகளையும், முதலாளி-தொழிலாளி கூட்டணி ஒரு தரப்பாக நுகர்வோரையும்,  இடைத் தரகராக அரசும், அதன் எதிரில் வாக்காளர்களும், இங்கு முதுகில் குத்தவும், காலை வாரவும் எப்போதும் தயாரான தரப்புகளின் போரும், விளையாடுமே இவ்வுலகம்.  இதில் தற்காலிகக் கூட்டும், எதிர்கால எதிர்த் தரப்பும், தற்காலிக எதிர்த் தரப்பும் எதிர்காலக் கூட்டும்,- ‘பின் தொடரும் நிழலின் குரல்’ என்ற போதிலும் படித்துக் கொண்டே வருகையில், திடீரென ஒரு விஸ்வரூப தரிசனம்  போல் கவித்துவமாக  இந்த பழகிப் போன மார்க்சிய கோஷம் (இந்தோனேசியத் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படாமல் பிலடெல்பியா தொழிலாளி இனிமேல் இருக்க முடியாது.)

இந்த நிலையில் நின்று பார்க்கையில் மார்க்ஸின் ’உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற கோஷம் புதிய பொருள் கொள்கிறது) புதிய ஸ்ருதியில், புதிய குரலில் , புதிய தொனியிலும் பொருளிலும்.

கனவில் தின்ற பழமும் இனிக்கிறது.

கிருஷ்ணன்.

***

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் எழுத்தாளர் அசோகமித்தரன் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன்.

60களில், 70களில் அவர் பட்ட கஷ்டங்களைப் பற்றியும் பேசினோம். ஏன் ஸார் எங்காவது வேலைக்குச் சேரலை என்று கேட்ட போது, வேலையே கிடைக்கலப்பா என்றார். 35 வயதைத் தாண்டியதால் அரசு வேலை சாத்தியமில்லை. தனியார் துறை முற்றாக முடக்கப் பட்டிருந்த சோசியலிச காலங்களில் வேலையே கிடைக்காமல் கடும் துன்பம். இன்று உருவாகியிருக்கும் பல கோடி புதிய வேலை வாய்ப்புகளை பற்றியும் பேசினோம். இத்தனைக்கும் இன்று ஜனத்தொகை 120 கோடி. ஆனால் அன்று பாதி அளவு கூட இல்லை !

ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மைதான். ஆனால் something is better than nothing என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். முன்பு இந்த வேலைகளும் இல்லை. அரை பட்டினி நாட்கள் மிக அதிகம். இன்னும் பல லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக சாத்தியம் உள்ளது.

சம்பளம் குறைவு. ஒரு முக்கிய காரணம் தொடர் விலைவாசி உயர்வு. அதற்கு மூலக் காரணம் அரசின் பற்றாக்குறை பட்ஜெட்டுகளினால் உருவாகும் பண வீக்கம். அரசு பற்றாக்குறைக்குக் காரணம் தேவையில்லாத வெட்டி செலவுகள், ஊழல், நிர்வாகச் செலவுகள், etc. முக்கியமாகப் பெருகி வரும் ராணுவச் செலவு. இவைகளை மிக குறைத்து, பண வீக்கத்தை கட்டுப் படுத்தி, விலைவாசி உயர்வையை மிக, மிக குறைந்த அளவுகளில் வைத்திருந்தாலே போதும். ராணுவச் செலவை குறைக்க வேண்டுமென்றால், காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இந்தியா abandon செய்ய வேண்டும் தான். அதாவது ஐ.நா மூலம் பொது வாக்கெடும் நடத்த வகை செய்து, தனியாகச் செல்ல விரும்புவர்களைத் தாரளமாக அனுமதிப்பது. அல்லது இன்னும் கொச்சையாகச் சொல்வதானால், அவர்களைக் கழட்டி விடுவது. அதன் பின் அவர்கள் மேலும் துன்புறுவார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அது அவர்களின் பிரச்சனை மற்றும் உரிமை.

அரசின் நலத் திட்டங்கள் ஒழுங்காக ஏழைகளைச் சென்றடைய targeted subsidies சரியாக செயல் படுத்தினால், ஏழைத் தொழிலாளர்கள் நிலை மிக, மிக உயரும். முக்கியமாகக் கல்வி, சுகாதாரம், கட்டுமானம் போன்ற விஷயங்களில் வீணாகும் பல லட்சம் கோடி அரசு பணம். இவைகள் தான் அடிப்படை பிரச்சனைகள். உலக மயமாக்கல், தாரளமயமாக்கலைத் தான் எல்லோரும் பொத்தாம் பொதுவாக அனைத்து பிரச்சனைகளுக்கும் குறை சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. படிப் படியாக, பல பத்தாண்டுகளில் வறுமையை மிக, மிக குறைத்த பல நாடுகளின் பாதை மற்றும் வரலாறு சொல்வதைப் பார்க்க வேண்டும். மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன் கண்ட ஐரோப்பிய தொழிலாளர்களின் நிலை (ஏறக்குறைய இன்றைய இந்தியத் தொழிலாளர்கள் நிலையை ஒத்தது) இன்று மிக அருமையாக உயர்ந்துள்ளது.  அங்கு அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் ஒப்பிடும் போது மிக, மிக அதிகம். (இன்னும் பல மடங்கு உயர்த்த முடியும், அரசுகள் ராணுவம் மற்றும் வெட்டிச் செலவுகளை குறைத்தாலே ). அதே பாதையில் இந்தியா ‘ஒழுங்கா’ , நேர்மையா பயணித்தால், நம் தொழிலாளர்கள் நிலையையும் அதே அளவிற்கு உயர்த்த முடியும். ஒரு நூற்றாண்டு ஆகலாம். முதலில் விவசாயத்தில், போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் இன்னும் எஞ்சியிருக்கும் ‘சோசியலிச’ பொருளாதாரக் கொள்கைகளை களைய வேண்டும்.

இறுதியாக, இந்த தாரள மயமாக்கல், உலக மயமாக்கலின் விளைவாக இந்தியாவில் ஏழ்மை எந்த அளவு குறைந்துள்ளது என்பதைப் பற்றி விரிவாக ஆராயும் ஒரு முக்கிய EPW கட்டுரை இது :

Shining for the poor too ?

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUMzFjMDAyOWUtOTI4OS00YmJkLWI2N2UtNTllNTM0ODE2Yjc4&hl=en

Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai – 96

***

Dear Mr. Jeyamohan

I liked  your article

உலகத்தொழிலாளர்களே!

The clarity was amazing. It was almost like a lesson in History with a vision for the Future.

Even though, I find the following

ஆகவே உழைப்பாளர்களின் தரப்பும் இனிமேல் உலகளாவியதாகவே இருக்க முடியும்.உலகளாவிய அளவிலான தொழிற் சங்கக் கூட்டமைப்புகள், உழைப்பாளர் இயக்கங்கள் மூலமே இந்த உலகளாவிய முதலாளித்துவ சூழலில் தொழிலாளர்களின் பேரம் பேசும் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும். வேறு வழியே இல்லை, தேசிய எல்லைகளைத் தாண்டியே ஆக வேண்டும். இந்தோனேசியத் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படாமல் பிலடெல்பியா தொழிலாளி இனி மேல் இருக்க முடியாது

a hard task. May be Possible.

You should have been a faculty in the University in the Philosophy Dept. It may have helped  revive such subjects. Unfortunately, the rules may not  permit that. That appears to be a problem.

I studied Maths  in Vivekananda college in Chennai run.  By the way, I quit Maths to become an Engineer. Barring a few, most students who have taken Science or Maths seem to have no interest. Then what to say of other subjects.

All my teachers in Viveka were very good, despite the pressure to teach from an examination perspective. They knew what they were teaching. I still remember them with a lot of Respect. Today, When I meet faculties from many Pvt Engg colleges, a sense of loss grips me.  The teachers do not know what they are teaching.  They have no scholarship, they see teaching as a stop gap arrangement. They will quit their jobs as and when they a get a Job in TCS or Infosys.  We seem to have no problems leaving our Kids to such lousy Teachers.

Even though you have mentioned about University System in many of your articles. An exclusive writeup on them would be welcome.

Sincerely

Bharath

 

முந்தைய கட்டுரைஊழல், முதலாளித்துவம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகஸ்தூரிரங்கன் – கடிதங்கள்