கவிதைகள் -தேவதேவன் சிறப்பிதழ்

அன்புள்ள ஜெ,

ஜூன் மாத கவிதைகள் இதழ் தேவதேவன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரையுடன் தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த இதழில் உள்ள வாசிப்பனுபவ கவிதைகள் “தேவதேவன் கவிதைகள்” முழுத் தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்த தன்னறம் மற்றும் வம்சி வெளியிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்து எழுதப்பட்டவை. இவ்விதழில் உள்ள நேர்காணலைக் கொடுத்து உதவிய அழசி ஸ்ரீனிவாசனுக்கு எங்கள் அன்பு.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.கி.பரந்தாமனார், மொழியின் தரப்படுத்தல்