இன்றைய காந்தி-கடிதம்

 

அன்பின் ஜெயமோகன் அவர்கட்கு,

“ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக யாரையும் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு சுவாரசியமாகத் தத்துவங்கள் எழுதுகிறார். காந்தியைப் பற்றி ஒரு நூலையே காந்தியின் முதலீட்டிய நவீன எதிர்ப்பைப் பற்றி எதுவும் சொல்லாமல் அவருக்கு எழுத முடிகிறது. முதலீட்டிய எதிர்ப்பு அல்லது விமர்சனமென்பது அவர் எழுத்தில் முக்கியத்துவம் பெறுவதில்லை. இன்றைய முரண்பாடுகளை  பிரச்சினைகளை என்றென்றும் மானுட பலவீனம் சார்ந்ததாக அறவியல் சிக்கலாக மாற்றிவிடுவார். அதனால் அவரை வாசிப்போர் ஆசுவாசமாகத் தத்துவப் பெருமூச்சுடன் நெகிழ்ச்சி கொள்ள முடிகிறது.”

என்று இம்மாத “தீராநதி” இலக்கிய இதழில் “ராஜன் குறை” எழுதியுள்ளார். இதனை எப்படி எதிர்கொள்வீர்கள் ?

ந.முரளிதரன்
(கனடா)

 

அன்புள்ள முரளிதரன்

இன்றைய காந்தி நூல் ரகசியச் சுற்றறிக்கை அல்ல. புத்தகம். ஆகவே எல்லாரும் வாசிக்கலாம். வாசிப்பவர்களுக்கு புரியக்கூடியதும்தான். ஆகவே ராஜன்குறை என்ன சொல்கிறார் என்பது பொதுவாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்குப் புரிந்துகொள்ள சாத்தியமானதுதான்

அந்நூல் காந்தியைப்பற்றி பொதுவெளியில் கடந்த அரைநூற்றாண்டாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், விளக்கங்கள் கொண்டது. காந்தியத் தத்துவத்தை ஆராய்வது அல்ல. ஆகவே அடிபப்டையில் விவாதத்தன்மை கொண்டது. மிக நேரடியானது.

அந்த குற்றச்சாட்டுகளை வைத்து வந்தவர்கள் இன்று அந்த குற்றச்சாட்டுகளை அப்படியே விட்டு விட்டுவேறு விஷயங்களைக் கொண்டு அந்நூலையும் காந்தியையும் எதிர்கொள்ள முயல்கிறார்கள்

அந்நூலின் வரையறைக்குள் காந்திய நவீனத்துவ எதிர்ப்புப் பொருளியலின் சாத்தியங்களைப்பற்றி அறுபது பக்க கட்டுரை உள்ளது.

அ.மார்க்ஸ் என்ற பூஜ்யம்ரூபாய் நோட்டுதான் தீரநதியின் முகம். இவர் அவரது இடத்தை அடிக்க முயல்கிறார் போல.

 

ஜெ

 

ஜெ,

அஜயன் பாலா என்பவரை பற்றி நீங்கள் எழுதிய சுட்டியை படித்தேன். அதிலிருந்து அஜயன் பாலா உங்களைப் பற்றி எழுதிய சுட்டியையும் படித்தேன். அவர் எழுதிய சுட்டிக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்குகிறிர்கள் என்று தோன்றுகிறது. பதில் சொல்ல எந்த தகுதியும் இல்லாத சுட்டி அது. நீங்கள் எழுத வேண்டியவை இன்னும் நிறைய உள்ளது.
ஒரு காலத்தில் தமிழில் வந்த எல்லா  குப்பை வெப்சைட்களையும் படித்து கொண்டிருந்தேன். இப்போது உங்கள் website, sramakrishnan website மற்றும் சில குறிப்பிட தக்க வெப்சைட்களும், அவற்றில் குறிப்பிடப்படும் மற்ற லின்க்களும் தான் படிக்கிறேன்.
தயவு செய்து அஜயன் பாலா போன்ற useless website linkகளை கொடுத்து எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் .
நன்றி,
ராஜேஷ்.
அன்புள்ள ராஜேஷ்
நீங்கள் சொல்வதை நான் மறுக்கப்போவதில்லை
ஆனால் தமிழ்நாட்டில் குப்பை என்பது ஓர் உணவுப்பொருள். வத்தல் மிளகு மல்லி என மளிகைப்பொருட்கள் முதல் எங்கும் பாதி உள்ளடக்கம் குப்பைதான்
இந்த குப்பையைத்தான் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு தமிழகம் முழுக்க கொண்டு சென்று சேர்த்துக்கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்
ஜெ

 

முந்தைய கட்டுரைகுடி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமரியில் ராகவன்