இன்றைய காந்தி ஒரு விமர்சனம்

அன்புள்ள ஜெ,

கோவையில் நேற்று நடந்த இலக்கிய நிகழ்வில் “இன்றைய காந்தி” குறித்த எளிய இந்த அறிமுகக் குறிப்பை வாசித்தேன். வழக்கம் போல் காந்தி குறித்து வசைகளும் ஏச்சுகளுமாக அரங்கம் ஏக அமர்களமாய் இருந்தது.

காந்தி மீது நம் தமிழ் அறிவு சூழலுக்கு இருக்கும் காரணமற்ற வன்மம் இப்போது வரை எனக்கு புரியாத ஒன்று.

http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_25.html

 

 

அன்புள்ள  இளங்கோ

 

உண்மையில் காங்கிரஸ் காரர்களுக்கு காந்தி மேல் மேலே வழிபாடு, உள்ளே வன்மம். இட துசாரிகளுக்கு சித்தாந்த எதிர்ப்பு, உள்ளூர மதிப்பு.

 

காந்தி மேல் உள்ள காரணமில்லா எதிர்ப்புக்கு ஒரு காரணம்தான். அவர் ஒரு அளவுகோலை தன் சொந்ந்த ஆளுமையைக் கொண்டு உருவாக்குகிறார். அது நம் அரசியால்வாதிகளை சிந்தனையாளர்களை சிறிதாக்கி காட்டுகிரது. அவரை நிராகரித்தே அவர்கள் தங்கள் சிறிய ஆளுமையை முன்வைக்க முடியும்

 

ஜெ