ஜெகசிற்பியன், நகுபோலியன்

ஜெகசிற்பியனை இன்று எவரேனும் வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. அவருடைய ஆர்ப்பாட்டமான சரித்திரநாவல் நடையை நகுபோலியன் கிண்டலடித்த மழநாட்டு மகுடம் கதை இன்றும் வாசிக்கப்படுகிறது.

ஆனால் ஜெகசிற்பியன் எழுதிய ஜீவகீதம் சென்னை சேரிப்பகுதியின் புலம்பெயர் சமூகப்பின்னணியில் எழுதப்பட்ட வேடிக்கையான கதாபாத்திரங்கள் கொண்ட நாவல். அன்றைய டிரெண்டுக்காக ஜெகசிற்பியன் என்று பெயர் வைத்துக்கொண்டு நந்திவர்மன் காதலி, ஆலவாய் அழகன் போன்ற நாவல்களை எழுதினார்.(ஆலவாய் அழகனுக்கு கோபுலு வரைந்தவைதான் தமிழில் ஒரு தொடர்கதைக்கு வரையப்பட்ட மிகச்சிறந்த ஓவியங்கள்)

ஜெகசிற்பியன் என்ற பெயரை செகப்பிரியர் என்னும் பெயரில் இருந்து உருவாக்கிக் கொண்டாராம்

ஜெகசிற்பியன்

ஜெகசிற்பியன்
ஜெகசிற்பியன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைமதாரில் இருந்து எமர்சனுக்கும் தேவதேவனுக்கும்- சக்திவேல்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.