இராயகோபுரம், மதுரை

அண்மையில் நான் கீழடியில் காலம் பற்றி, அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்ட காலக்கணிப்பை ஏற்றுக்கொண்டு, அதை இந்திய வரலாற்றுப் பின்னணியிலும் உலகவரலாற்றுப் பின்னணியிலும் வைத்து பேசிய ஒரு காணொளி விவாதமாகியது. வசைகள், கொந்தளிப்புகள், தமிழ்ப்பெருமை பேசும் பொங்குதல்கள் இணையத்தை கலக்கின.

மெய்யாகவே நமக்கு நம் பாரம்பரியம் பற்றி அப்படி ஒரு பெருமிதம் உள்ளதா என்ன? இருந்தால் நம் கலைச்செல்வங்கள், நம் மாபெரும் சாதனைகள் இப்படி சீரழிய விடப்பட்டிருக்குமா? மதுரை புதுமண்டபம், ராயகோபுரம், பத்துத்தூண் ஆகியவை நம்மால் சீரழிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் எவருக்கும் நாம் வரலாற்றுணர்வே இல்லாத வெறும்கும்பல் என்றே தோன்றும். உலகில் எங்கும் இத்தகைய வரலாற்றுச்சின்னங்கள், கலைச்சின்னங்கள் இப்படி அழியவிடப்பட்டு நான் கண்டதில்லை. பலமுறை மதுரைக்கு வெளிநாட்டவருடன் சென்று அந்தக் கலைச்சீரழிப்பை கண்டு அவர்கள் கண்களைப் பார்க்கமுடியாமல் கூசி நின்றிருக்கிறேன்

மதுரை இராயகோபுரம்

 

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு
அடுத்த கட்டுரைமுத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்