கு.சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகமாக சென்ற தலைமுறையில் அறியப்பட்டவர். சின்னப்ப பாரதியின் தாகம் நாவல் க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரால் கலையம்சம் கூடிய படைப்பாக அடையாளம் காட்டப்பட்டது. அந்நாவலின் தொடக்கப் பகுதிகளில் மண்ணுக்கும் விவசாயிக்குமான உறவு ஒரு நாட்டாரிலக்கியத்தின் இயல்பான கவித்துவத்துடன் அமைந்திருந்தது. நாவல் வளர்கையில் வழக்கமான கட்சிக்கொள்கை அதில் அமைந்து வழக்கமான நாவலாகிவிட்டது. ஆனால் அந்த முதற்பகுதியாலேயே அது இலக்கிய இடம் உடையது.
தான் அடைந்ததை, தேர்ந்த விமர்சகர்கள் சுட்டிக் காட்டியபின்னரும் சின்னப்ப பாரதி அடையாளம் காணவில்லை. அவர் கட்சிக்கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை ஒடித்து மடக்கும் நாவல்களையே தொடர்ந்து எழுதினார். தாகம் நாவலால் எதிர்காலத்தில் அடையாளம் காணப்படுவார்.
கு.சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி
முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி உயிரிழந்தார்