பாலகுமாரன் ஒரு கடிதம்

பாலகுமாரனைப் பற்றிய கட்டுரை வாசித்தேன்

நீங்கள் கூறியது பெரும்பாலும் நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு பாலகுமாரனைப் பிடிக்கும் என்றாலும் கூட.
ஒரே ஒரு கமெண்ட்

பாலகுமாரன் எழுத்துக்கள் இரு வகைப்படும்

1. மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள் : மொழி இருக்கும். சிந்தனை ஆழம் அவ்வளவாக இருக்காது…(குதிரை குறித்த கவிதை எனக்குப் பிடிக்கும் )

2. காசும் பிறப்பும், உடையார் : எனக்குக் காசும் பிறப்பும் பிடித்த கதை…ஓரளவுக்குத் தனி மனிதனின் ஆன்மீகப் பிரயாணத்தைச் சொல்வதாக இருக்கும். அவ்வகைப் பிரயாணத்துக்குத் தயார் செய்ய ஆரம்ப நிலைப் புத்தகமாகக் கொள்ளலாம்.

உடையார், ஆரம்பத்தில் சோழ வரலாறு ;அந்தக் கால கட்டம் குறித்துப் படிக்கையில் ஒரு இன்பம் இருக்கும். அதன் பிறகு, மூன்றாம் நான்காம் பகுதிகளில் அந்த ஆழம் இன்பம் நீடிக்காது.

எனக்குப் பொன்னியின் செல்வன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. ஒரு வரலாற்றுப் படத்தைப் பார்த்த இன்பம் இருக்கும் அவ்வளவே. உடையார் அந்த வரிசையில் வந்த நூலாகவே நான் கொள்கிறேன். ஆனாலும் வரலாற்றைக் கூறும் வகையில் ஆராய்ச்சி அதிகம் கொண்டதாக நினைக்கிறேன்.

புதுமைப்பித்தனை நான் படித்ததே இல்லை. இப்போதைக்குப் படிப்பதாக இல்லை. மற்றது படிக்க நிறைய இருக்கிறது.

ஸ்ரீதர் விஸ்வநாத்

அன்புள்ள ஸ்ரீதர்

வாசிப்பின் ஒரு கட்டத்தில் எதையும் படிப்பதாக இல்லை என  முன்கூட்டியே ஒதுக்குவது அவ்வளவு நல்ல விஷயமல்ல

பாலகுமாரனைத் தேவைக்கும் மேலாகவே வாசித்துவிட்டீகள் என நினைக்கிறேன்

ஜெ

பாலகுமாரன்


 

முந்தைய கட்டுரைஅதர்வம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஓரினச்சேர்க்கை-கடிதங்கள்