சுத்தானந்த பாரதி, எத்தனை வாழ்க்கைகள்!

ஒரு வாழ்க்கைக்குள் ஏராளமான வாழ்க்கைகளை வாழ்பவனே மெய்யாகவே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாழ்க்கையை வாழவே பொழுதும் ஆற்றலும் இல்லாமலிருக்கிறது. காரணம் எதிலாவது சிக்கிக் கொண்டிருக்கிறோம். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்து, ஒரே பாதையில் ஓடி இறுதியடைகிறோம்

கவியோகி என அழைக்கப்பட்ட சுத்தானந்த பாரதியின் வாழ்க்கையை பார்க்கிறேன். எத்தனை வாழ்க்கைகள்! தசாவதாரம் கமலஹாசன் மாதிரி ஏகப்பட்ட மனிதர்களாக ஒரேசமயம் வாழ்ந்திருக்கிறார்.பெரும்பயணி. நாடோடி. ஆனால் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பாண்டிச்சேரியில் அரவிந்த ஆசிரமத்தில் இருந்திருக்கிறார். மாபெரும் பேச்சாளர், ஆனால் இருபதாண்டுக்காலம் மௌனவிரதம் இருந்திருக்கிறார். நாநூறு நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். ஆனால் நாலைந்து மொழிகளை கற்றிருக்கிறார். சுதந்திரப்போராட்ட வீரர், யோகி…

நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ‘கல்யாணம் பண்ணிக்காம இருந்தா வாழ்க்கையிலே ஏகப்பட்ட நேரம் மிச்சமிருக்கும் சார். எல்லாமே சாத்தியம்தான்’ என்றார்.

சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதி
சுத்தானந்த பாரதி – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி- உரையாடல்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார்