பனைக் கனவு திருவிழா – 2022

அன்புள்ள அண்ணன்,

தமிழகத்தில் வீழ்ந்துகிடந்த பனை மரத்தை கைவிட்டுச் செல்லும் நிர்பந்தத்தில் பனையேறிகள் பலரும் வெளியேறிக்கொண்டிருக்கையில், பனை சார்ந்த செயல்பாடுகள் அங்காங்கே இருக்கும் ஒருசில பனையேறிகளாலும் தன்னார்வலர்களாலும் முன்னெடுக்கப்படுவதை அறிவீர்கள். பனை விதை நடவு, பனை சார்ந்த கைவினை பயிற்சிகள், பனை உணவுகள் மீட்டுருவாக்கம், பனை உணவுகளுக்கான சந்தையை மீட்டெடுத்தல் என இவைகள் தன்போக்கில் மக்களியக்கமாக எழுந்துவருகிறது.

இச்சூழலில், அரசு என்னதான் பனை சார்ந்த தொழில்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தாலும், உடனடியாக எதுவும் செய்ய இயலாத அளவிற்கு மிக நீண்ட இடைவெளி இத்துறையில் ஏற்பட்டிருக்கிறது. அரசு தரப்பிலிருந்து பனை சார்ந்து இயங்குபவர்களுக்கு நல்லவை நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் நரசிங்கனூர், என்ற பகுதியில் சுமார் 150 பனை சார்ந்த தொழிலாளர்கள் இன்றும் பனையுடன் நெருக்கமான உறவை பேணிவருகிறார்கள். எனது பயணத்திலேயே பனை மரங்கள் சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட ஒரு சில ஊர்களில் பூரிகுடிசை முதன்மையானது. அனைத்து வீடுகளுமே பனை ஓலைகளால் வேயப்பட்டது தான் அமைத்திருக்கிறது. இவ்வூரில் தான் பனை ஓலையில் செய்யப்படும் சம்பு என்று அழைக்கப்படும் மழையணியான கொங்காணி செய்யப்படுகிறது. தடுக்கு என்ற பனை ஓலைகளை கோர்த்து செய்யப்படும் ஒருவித தட்டிகளை உருவாக்கும் நுட்பத்தையும் இவ்வூரில் நாம் பார்க்கலாம்.

நரசிங்கனூரில் கடந்த 130 நாட்களாக அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் எங்குமே இவ்விதம் தொடர்ந்து கள் இறக்குவதற்கான முன்னெடுப்புகள் செய்யப்படவில்லை என்பது அடிக்குறிப்பு.

இப்பகுதியில் உள்ள பனையேறிகள் ஒன்றிணைந்து “பனங்காடு” என்ற அறக்கட்டளையின் வாயிலாக பனை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். தமிழகம் தழுவிய சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கோன்டு ஒரு சில மாவட்டங்களை கடந்திருந்த நிலையில், நோய் தொற்றினால் முடிக்க இயலாது போய்விட்டது.

பனை மரம் குறித்த ஒரு பிரம்மாண்ட விழிப்புணர்வை முன்னெடுக்கும் பொருட்டு, தற்பொழுது நரசிங்கனூர் பகுதியில் “பனை கனவு திருவிழா” ஒன்றை மைக்க திட்டமிட்டு  பனை ஏறிகள், பனை சார்ந்த கைவினைக் கலைஞர்கள், பனை உணவு தயாரிப்பவர்கள், கொல்லர்கள், கலயம் செய்பவர்கள்,  பனை ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள். பல்வேறு தரப்பினர் இதில் ஈடுபடுவதால், ஆன்மீக தலைவர்கள், பல்வேறு கட்சியின் பிரதினிதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் எங்கும் நிகழாத வகையில், 1000 நபர்கள் இணைந்து மாவொளி (கார்த்தி) சுற்றும் நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இளம் தலைமுறையினரையும் இடையறாது செயல்பட்டுவரும் மூத்த பனையேறிகளையும் பெண்களையும் ஊக்குவிக்கும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் மற்றும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும். தமிழகம் முழுவதிலுமிருந்து வருகிறவர்களுக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக அமையவேண்டி, பனங்காட்டிலேயே இதனை முன்னெடுக்கிறோம். நாவிற்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் இந்த நிகழ்சியைப்போல வருடம் தோறும் பனை சார்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் பனை கனவு திருவிழாவினை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தில் பனை மரத்க்டினை கட்டியணைத்து அதனையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்ற மக்கலைக் குறித்த ஒரு அறிமுகம் வேண்டுவோர், பனை சார்ந்து தற்போது ஏற்பட்டுவரும் எழுச்சியைக் கண விளைவோர், மரபு மற்றும் இயற்கை சார்ந்து புது வேலைவாய்ப்பை பெருக்க விரும்புவோர், அனைவருக்கும் இவ்விழா குறைவின்றி அள்ளிக்கொடுக்கும் கூறுகள் கொண்ட நிகழு பெருக்கான அமைத்திருக்கிறோம்.

இச்சுழலில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 10000 நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்பார்க்கிறோம். ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் நிகளும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் உங்கள் வாசகர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இன்நிகழ்விற்காக சுமார் 6.31 லெட்சம் செல்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.

அன்புடன்
பனை திருப்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 30 ஆண்டுகளாக.

GPay
பாண்டியன் – 9500627289
Name: PANANGADU ARAKKATTALAI

BANK: IDBI BANK

A/C NO: 1053104000156004

Branch Name: VILLUPURAM IDBI BANK Branch

IFSC: IBKL0001053

***

முந்தைய கட்டுரைஆண்டி சுப்ரமணியம்
அடுத்த கட்டுரைவீரான்குட்டி கவிதைகள்