குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

நண்பர்களுக்கு,

2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.

இடம் :கவிக்கோ மன்றம் சி.ஐ.டி காலனி

நாள் : 11-6-2022

விழாவில் கவிஞர் போகன் சங்கர் , மலையாளக் கவிஞர் வீரான்குட்டி, எழுத்தாளர் பார்கவி  மற்றும் ஜெயமோகன் கலந்துகொள்வார்கள்.

இவ்வாண்டு விருதுவிழாவை ஒட்டி மூன்று அமர்வுகளையும் ஒருங்குசெய்துள்ளோம். கோவிட் தொற்று காரணமாக சென்ற ஆண்டுகளில் குமரகுருபரன் விருது பெற்ற வேணு வேட்ராயன், முகமது மதார் இருவருக்கும் விழா என ஏதும் நிகழவில்லை. ஆகவே அவர்கள் இருவருக்கும் இரண்டு அமர்வுகள் நடைபெறும். சிறப்பு விருந்தினராக வரும் மலையாளக் கவிஞர் வீரான் குட்டிக்கு ஓர் அமர்வு.

வேணு வேட்ராயன் அமர்வு

முத்துக்குமார், அகர முதல்வன்

மதார் அமர்வு

கவிதா ரவீந்திரன், சுரேஷ் பிரதீப்

வீரான் குட்டி சந்திப்பு

மொழியாக்கம் ஜெயமோகன்

நண்பர்கள் அனைவரும் காலைமுதல் அனைத்து அமர்வுகளிலும் பங்கெடுக்கவேண்டும் என கோருகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாற்று வருடும் யானைச்செவிகள்
அடுத்த கட்டுரைசியமந்தகம், கடிதங்கள்