சாண்டில்யன் -கனவுப்பட்டின் தறி

தமிழ் விக்கிக்கு பங்களிப்பாற்றும் நண்பர்கள் சொன்ன ஒரு முக்கியமான அவதானிப்பு ஆர்வமூட்டுவது. எழுத்து இதழ் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்து இதழ் நாநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட காலகட்டத்தில் ஐந்து லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்ட குமுதம் இதழ்கள் கிடைப்பதில்லை. அதன் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளே கிடைப்பதில்லை.

சாண்டில்யன் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு முக்கியமான புள்ளி. நம் கூட்டுக் கனவுகளை உருவாக்கியவர். நம் பெருமிதங்களை இளமையிலேயே விதைத்தவர். ஆனால் மிகக்குறைவாகவே செய்திகள் கிடைக்கின்றன. பலரிடம் உசாவி அறிந்த செய்திகளுடன் அவருடைய முதன்மையான நாவல்கள் அனைத்தைப் பற்றியும் குறிப்புகளுடன் தமிழ் விக்கி ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது. ஆனால் இன்னும் பலமடங்கு செய்திகள் தேவை. இன்னும் திருத்தங்களும் இருக்கலாம்

சாண்டில்யன்
சாண்டில்யன் – தமிழ் விக்கி

சாண்டில்யன்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கியில் வண்ணதாசன்- கடிதம்
அடுத்த கட்டுரைஎஞ்சிய பசுஞ்சோலை