வை.மு.கோதைநாயகி அம்மாள்- எஞ்சும் பெயர்

வரலாற்றில் வாழ்வது, வரலாற்றில் எஞ்சுவது என இரண்டு உண்டு. புதுமைப்பித்தன் வாழ்பவர். வை.மு.கோதைநாயகி அம்மாள் எஞ்சுபவர். ஆனால் அவ்வாறு எஞ்சுவதேகூட எளிய விஷயம் அல்ல. காலம் எல்லா சிறு ஆளுமைகளையும் அடித்துச் சென்றுவிடுகிறது. பெயர் என நிலைகொள்வதற்கே வாழ்நாள் முழுக்க நீளும் பெரும்பணியைச் செய்யவேண்டியிருக்கிறது,

வை.மு.கோதைநாயகி அம்மாள் இன்று எவராலும் வாசிக்கப்படுபவர் அல்ல. ஆனால் அவர் இன்றைய புனைகதை  மொழிக்கும் வடிவுக்கும் பங்களிப்பாற்றியவர். இன்று எழுதும் பெண்கள் அனைவருக்கும் அவர் தொடக்கப்புள்ளி. பெண்ணியத்தை அவரில் இருந்தே தொடங்க முடியும். நூறாண்டுகளுக்கு முன் வீட்டின் எல்லைகளைக் கடந்து எழுந்து இதழ் நடத்துவதும், எழுதுவதும், தன் கருத்துக்களை பொதுவெளியில் துணிந்து முன்வைத்து வாதிடுவதும் பெரும் சாகசங்கள்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் என்னும் ஒரு பெயரில் இருந்து தொட்டுத்தொட்டு பல பெயர்களுக்குச் செல்லமுடியும். நாம் இன்று மறந்துவிட்ட ஓர் அறிவியக்கத்தையே வாசித்தெடுக்க முடியும். அது இன்று நாம் நின்றிருக்கும் அறிவுத்தளத்தின் அடிப்படை. தமிழ் பெண்ணெழுத்தின் வரலாறு, தமிழ் பெண்ணியத்தின் தொடக்ககாலம்.

ஒரு கலைக்களஞ்சியம் ஏன் தேவையாகிறதென்றால் வரலாற்றின் இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து கோலமென ஆக்கி காட்டுவதற்கே.

வை.மு.கோதைநாயகி அம்மாள்
வை.மு.கோதைநாயகி அம்மாள் – தமிழ் விக்கி

வை.மு.கோதைநாயகி அம்மாள்- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- அடையாளம்
அடுத்த கட்டுரைபெரும்பணியில் இருத்தல்