எஸ்.வையாபுரிப் பிள்ளை- புனித பீடம்

இருபதாண்டுகளுக்கு முன்பு நானும் வேதசகாயகுமாரும் பேராசிரியர் ஜேசுதாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக அவர் எஸ்.வையாபுரிப் பிள்ளை பற்றிச் சொன்னார். மிகக்குறுகலான உருவம் கொண்டவர். சாலையில் அவர் சென்றால் ‘ஓரமா ஒதுங்கிப்போவும் ஓய்’ என்று ரிக்‌ஷாக்காரர் சொல்வார். ஆனால் அந்த சிற்றுடலில் இருந்து வற்றாத ஊக்கம் ஊறிக்கொண்டிருந்தது. ஒருநாளில் மூன்று மணிநேரத்துக்கு மேல் தூங்கியவர் அல்ல. பேரகராதிப் பணியின்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது எழுபது பக்கங்கள் கையால் எழுதுவார்.

“சிலர கர்த்தர் அப்டி படைச்சிருக்கார்… ஒரு வேலைக்காக நேந்து விட்டிருக்கார். பொலியாடு துள்ளி திமிறிட்டு பலிபீடத்துக்கு போறது போல அவங்க அங்க போயி நிப்பாங்க…” என்றார் பேராசிரியர். ஒரு மொழியின் முதல் பேரகராதியை உருவாக்கிய மேதையை அந்த மொழி முற்றாக மறந்துவிட்டது. அதைச் சொல்லி பேராசிரியர் சொன்னார் “நாம இங்க கன்யாகுமரி மண்ணில அவரை மறக்கல்ல. நெஞ்சில வச்சுக்கிட்டிருக்கோம்” சட்டென்று கண்கலங்கி விசும்ப ஆரம்பித்தார்.

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை பெயரை வாஷிங்டனில் சொன்னபோது நான் பேராசிரியர் ஜேசுதாசனை  நினைத்துக்கொண்டேன். மாபெரும் ஆசிரியர்களின் சொற்கள் வீணாவதில்லை.

எஸ்.வையாபுரிப்பிள்ளை
எஸ்.வையாபுரிப்பிள்ளை- தமிழ் விக்கி

எஸ்.வையாபுரிப்பிள்ளை- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி விழா – புகைப்படங்கள்