ஹிட்லரும் வாக்னரும்- கடிதம்

வாக்னர்

அன்புள்ள ஜெ,

சங்கச் சித்திரங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில்வாக்னரின் இசையைக் கேட்டு ஹிட்லர் கண்ணீர் விடுவதுண்டுஎன்றார் நித்யா, என எழுதியுள்ளீர்கள். செவிளில் அறையப்பட்டதை போல உணர்ந்தேன் இவ்வரியை படித்து. இது உண்மையா? ஹிட்லரால் இசையை உள்வாங்கி உளம்உருகி கண்ணீர் விடமுடியுமா?

மணிமாறன்

 ***

அன்புள்ள மணிமாறன்,

ஹிட்லர் வாக்னரின் ரசிகர் என்பது உலகமறிந்தது. உலகம் அறிந்த இன்னொன்று, ஹிட்லரைப்போலவே கொஞ்சம் யூதவெறுப்பு உடையவர் வாக்னர் என்பது. ஆனால் அது ஹிட்லர் வழியாக கூட்டக்கொலையாக ஆவதெல்லாம் வாக்னர் உய்த்துணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஹிட்லர் வாக்னரை உண்மையில் ரசித்திருக்க வாய்ப்பில்லை, இசை உள்ளத்தை மேம்படுத்துவது என வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதினார். அதை மறுத்து உயர்கலைக்கும் அறவியலுக்கும் நேரடி தொடர்பு ஏதுமில்லை. அறவியலில் எதிர்மறைத்தன்மை கொண்ட பெரிய கலைஞர்கள் உண்டு என நிர்மலா நித்யானந்தம் ஒரு கட்டுரை எழுதினார். இந்த விவாதம் 1970 களில் தமிழில் நடந்த முக்கியமான ஒரு இலக்கியப் பூசல்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- தேவைகள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- முதல்பதிவு