நீங்கள் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, உசாவல் என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளீர்கள். இதன் அர்த்தம் என்ன சொல்லவும். தேடல், கேள்வி என்று புரிந்து கொண்டு உள்ளேன்.
அன்புடன்,
மணி, பெங்களூர்
அன்புள்ள மணி,
அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்று மூலநூல்களை பயன்படுத்துதல். அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் என்பவை மூலநூல்களிலும் அடிப்படையானவை.
சொற்களை, கருத்துக்களை ‘நமக்கு தோன்றியபடி’ பொருள் கொள்ளக் கூடாது. பலசமயம் பல ஆண்டுக்காலம் பிழையான ஒரு பொருளை நாம் கொண்டிருப்போம். அது வரை நாம் வாசித்த எல்லாமே பிழையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். எவ்வளவு பெரிய வீணடிப்பு.
அகராதியில் பொருள் கொண்டபின் அச்சொல் அச்சூழலில் ஏதாவது மேலதிக அர்த்தம் உள்ளதா என யோசிக்கவேண்டும். அப்படி இருந்தால் அது கலைச்சொல். கலைச்சொற்களுக்கான அகராதியில் பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும் பெரும்பாலான சொற்களை நாம் சற்றே பிழையாகத்தான் புரிந்துகொண்டிருப்பொம்
உசாவல் என்னும் சொல்லுக்கு அகராதிப்பொருள் இது
உசாவுதல்
உசாவுதல்
-
- உசாவல்.
- சிந்தித்தல்.
- கேட்டறிதல்.
- செவியுறுதல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் – ucāvutal (ஒலிப்பு)
*
தமிழில் உள்ள பொதுவான பொருள் கேட்டறிதல், சிந்தித்து அறிதல். இலக்கியச் சூழலில் ஒன்றை தேடிச்சென்று ஆராய்தலைக் குறிக்கும் சொல். ஆகவே கலைச்சொல்.
quest என்னும் ஆங்கிலச் சொல்லுக்குச் சமானமாக பயன்படுத்தப்படுகிறது
ஜெ