கிறிஸ்தவத்தில் சூஃபி மரபு?

வில்லியம் மில்லர் விக்கி 

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம்

இஸ்லாமிய மதம் இந்து மதத்தோடு இனணந்து சூபியிசம் தோன்றி சூபி ஞானிகள் உருவானது போல் கிருஸ்தவ மதம் இந்துமதத்தோடு உரையாடல் நிகழ்த்தவே இல்லையா?

சற்று விளக்கமாக பதிலளிக்கவும்

நன்றி.

பா.முருகானந்தம்

மதுரை

அன்புள்ள பா முருகானந்தம்

இஸ்லாம் மதத்திற்குள் சூஃபி மரபு முனரே இருந்தது. அதன் பிறப்பிடம் பாரசீகம் என்கிறார்கள். இந்தியாவுக்கு வந்து இந்து மதத்துடன் உரையாடி இங்குள்ள சூஃபி மரபு உருவானது. இது சற்று வேறுபட்டது.

கிறிஸ்தவம் இங்கே பரவலாக ஆகி சிலகாலமே ஆகிறது. ஒரு மதமரபு உருவாக சில நூற்றாண்டுகள் ஆகும். இன்று கத்தோலிக்க கிறிஸ்தவம் இந்து மதத்துடன் உரையாடலிலேயே உள்ளது. அதன் விழாக்கள், சடங்குகள் அனைத்திலும் இந்துமதச் செல்வாக்கு உண்டு. அதன் கொள்கைகளிலும் அச்செல்வாக்கு உள்ளது. குருகுலம் போன்ற அமைப்புகள் அதற்குள் உருவாகியிருக்கின்றன.

அண்மையில் நான் திருப்பத்தூர் உரையில் குறிப்பிட்ட ஏனஸ்ட் பாரஸ்டர் பேட்டன் (Ernest Forrester Paton) அமைத்த கிறிஸ்துகுருகுலம் அதற்கு ஒரு சான்று. அத்தகைய பலர் உள்ளனர். அவை திரண்டு ஒரு துணைமதம் போல ஆகலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅடிப்படைகளில் அலைதல்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, கடிதங்கள்