இருள்களி

ஜெ

இன்று ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து நாடுகளின் மாவீரர்கள் தினம். அன்சாக் தினம்.

1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கருங்கடலை அண்மித்த கலிப்பொலி குடாவைக்கைப்பற்றி புதிய போர்முனை ஒன்றை திறப்பதற்காக ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து படையினர் உட்பட பல்லாயிரக்கணக்கான நேசநாட்டு துருப்புக்கள் துருக்கி பேரரசுடன் சமரிடுவதற்கு தரையிறக்கப்பட்டனர். இந்த தரையிறக்கத்துக்கு எதிராக ஜேர்மன் மற்றும் துருக்கி நாடுகளின் படையினர் எட்டு மாதங்களாக மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து துருப்புக்கள் ஆவர்.

ஆஸ்திரேலிய – நியூஸிலாந்து நாடுகளின் வரலாறு காணாத இந்த இராணுவ பேரிழப்பினையும் அதில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான படையினரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் அன்சாக் நாள் (Australian and New Zealand Army Corps Day)  அனுட்டிக்கப்பட்டுவருகிறது.

இந்த வரலாற்றினைப் பின்புலமாகக்கொண்ட எனது “இருள்களி” – என்ற சிறுகதை அன்சாக் மாதத்தின்போது “வனம்” இதழில் வெளியாகியிருந்தது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

இருள்களி

நன்றி
தெய்வீகன்

முந்தைய கட்டுரைஅமெரிக்கா! அமெரிக்கா!
அடுத்த கட்டுரைஒலிவடிவில் என் நூல்கள்