விஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்

வணக்கம்.

வெண்முரசு முதலாவிண் நூல் Amazon Kindle இல் பதிவேற்றம் செய்வார்களா? தேடிக் காணவில்லை. மிகுதி வாசித்தாயிற்று.

Australiaவில் வசிப்பதால் Kindle மூலம் வாசிப்பதற்கே சாத்தியமாக உள்ளது. தயவுசெய்து அறியத் தருவீர்களா?

நன்றி.

அன்புடன்,
சுபா ஸ்ரீதரன்

***

அன்புள்ள சுபா,

என்னுடைய மின்னூல்களை கிழக்கு பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மின்னூல்களும் அவர்களே வலையேற்றியிருந்தனர். இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் அவற்றை வலையேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் அச்சுப்பிழை பார்ப்பது உட்பட அனைத்தையும் மீண்டும் செய்யவேண்டியிருப்பதனால் தாமதமாகிறது. விரைவில் வலையேற்றம் செய்வோம்

ஜெ.

***

அன்புள்ள ஜெ

இம்மாதம் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுட்டிகளை இணைத்துள்ளோம்.

நத்தையின் பாதை

மலை பூத்தபோது

இலக்கியத்தின் நுழைவாயிலில்

இன்னும் தொடர்ச்சியாக மின்னூல்கள் வெளிவரும்

அன்புடன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைதிருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை
அடுத்த கட்டுரைநீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்