யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்-கடிதங்கள்

யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்

அன்புள்ள அண்ணா

நான் எதிர்பார்த்த ஒரு விளைவை உங்கள் கதை ஏற்படுத்தி விட்டது மிகவும் மகிழ்ச்சி. நான் வால்பாறை அருகே காடம்பாறை என்னும் ஊரில் அப்பாவின் வேலை காரணமாக பல வருடங்கள் இருத்துரிக்கிறேன் ஆகவே காடுகள் மீது மிக அதிக பாசம். உண்டு யானை டாக்டர் படித்தபிறகு அவற்றின் வேதனை புரிந்தது! மாற்றம் வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது நடந்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி .ஆனால் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தினால் நிலைமை மோசமாகுமோ ஏன்ற பயம் உண்டு உங்கள் கருது என்ன ?

ஐசக் ராஜ்

***

அன்புள்ள ஐசக்,

காடுகளில் பிளாஸ்டிக் தடை இன்னும்கூட இறுக்கமானதாக தொடரவேண்டும் என்பதேன் என் எண்ணம். பிளாஸ்டிக்குக்கு பதிலாக அலுமினிய கேன்களில் மது விற்கப்பட்டால் இரண்டு நன்மைகள், ஒன்று அவை பெரும்பாலும் திரும்ப சுழற்சிக்கு வந்துவிடும். இரண்டு அவை சூழலை அழிப்பதில்லை.(பிளாஸ்டிக் அளவுக்கு)

ஜெ

***

அன்புடையீர்,

பயன்படுத்திய, காலியான மது பாட்டில்களை, உடையாமல், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படாமல், திரும்பப் பெற சுலபமான வழி உண்டு. காலி பாட்டில்களை, அதன் மூடி, இதர packing உடன் திரும்ப கொடுத்தால் ரூபாய் 10 வழங்கப்படும் என்று அறிவித்தல் வேண்டும். வெறும் bottle மட்டும் திரும்பக் கொடுத்தால் ரூபாய் 5 கொடுக்கலாம்.

இந்த மது அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக் tumbler திரும்பக் கொடுத்தால் அதற்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம். இந்த திரும்பப் பெறும் மையங்களை, TASMAC கடைகள் அருகிலேயே அமைக்கலாம்.

மது பான பாட்டில்கள விற்கும்போதே, இந்த 10 ரூபாய் திரும்பத் தரும் தகவலை சொல்லி விற்கலாம். பின்னர், இது போன்ற திட்டங்களை மற்ற நுகர்வோர் பொருள்களுக்கும் செயல் படுத்தலாம்.

ராமசாமி தனசேகர்

***

அன்புள்ள ராமசாமி

முக்கியமான பிரச்சினை பாட்டில்களை வேண்டுமென்றே வீசி எறிந்து உடைப்பதுதான். அதைத்தவிர்க்கவே கண்ணாடிப்புட்டிகளை தடைசெய்கிறார்கள். அதற்கு மாற்றாக அலுமினிய கேன்களை பயன்படுத்துவதே சரியானது. அலுமினிய கேன் 99 சதவீதம் மறுசுழற்சிக்கு வரும் பொருள். மண்ணை கெடுக்காததும்கூட

ஜெ

யானைடாக்டர் -தன்னறம்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் வாசகர் குழுமம்,16
அடுத்த கட்டுரைகன்யாகுமரி கவிதை முகாம் – ஒரு கடிதம்