கன்னி நிலம்,கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

இன்று கன்னிநிலம் நாவலை வாசித்து முடித்தேன். இடையில் வாசிப்பு இல்லாமல் நீண்ட நாள் கழித்து வாசித்த நாவல். நாவலை குறித்து என்னால்  நினைத்ததை எழுத முடியவில்லை. இருப்பினும்  இன்று தற்செயலாக முகதூலில் இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் பதிவிட்டிருக்கிறேன். அதை கண்டதும் கதையின் லயத்திலிருந்த எனக்கு மிகுந்த மனவெழுச்சியை அளித்தது. இந்த படத்தில் இருப்பது போல இந்த வேளிக்கு அப்பால் போர்களும், சண்டைகளுமாய், வேளியை கடந்து ‘நோ மேன் லேன்டில்’ நெல்லையப்பனும் ஜவாளாமுகியும் மதூக பூக்களாய் மகிழ்ந்திருந்தனர்.

சரண்ராஜ்

***

அன்புள்ள ஜெ

உங்கள் நாவல்களில் ‘சாதாரணமான’ நாவல்கள் என்றால் உலோகம், கன்னிநிலம் இரண்டும்தான். பொதுவான வாசகர்கள் வாசிக்கலாம். நான் உங்கள் நாவல்களை வாசிக்க விரும்பும் புதிய வாசகர்களுக்கு அவை இரண்டையும்தான் பரிந்துரை செய்வது வழக்கம்.

கன்னிநிலம் ஒரு எளிமையான துப்பறியும் கதை. ஆனால் அதில் ஷிராய் லில்லி என்னும் படிமம் அழகானது. அர்ஜுனனில் இருந்து இன்று வரை மலர்ந்திருக்கும் ஒரு மலர். அந்த மலர் மட்டுமே விரிந்திருக்கும் ஒரு நோ மேன்ஸ் லேண்ட். அந்த ரொமாண்டிக் கற்பனைதான் நாவலின் அழகே.

செல்வராஜ் குமார்

***

முந்தைய கட்டுரைகொற்றவை, கவிதைகள்
அடுத்த கட்டுரைரா.கி.ரங்கராஜன் -நன்கறிந்த முகம்